தமிழகத்தில் 'ஸ்கரப் டைபஸ்' என்ற பாக்டீரியாவின் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக தமிழக பொது சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரிக்கட்ஸியா என்ற பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒட்டுண்ணிகள் மற்றும் பூச்சிகள் கடிப்பதால் இந்த ஸ்கிரப் டைபஸ் தொற்று ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, தடிப்புகள் இருந்தால் இத்தொற்றுக்கான காரணங்களாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், சென்னை, திருப்பத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இந்த நோயின் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும் தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் ஸ்கரப் பைடஸ் தொற்று நோய் பாதிப்பிற்கான தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், வனப்பகுதிகளில் வசிப்பவர்கள், புதர் மண்டிய பகுதிகளில் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ள பொது சுகாதாரத்துறை, இந்த நோய்க்கு மருத்துவரின் பரிந்துரைப்படி அசித்ரோமைசின், டாக்ஸிசைக்கிள் என்ற மருந்துகள் தரப்படுவதாகவும் அறிவித்துள்ளது.