Published on 04/01/2025 | Edited on 04/01/2025
சென்னை தேனாம்பேட்டை நந்தனத்தில், இன்று (04-01-25) மாலை 4.00 மணியளவில், புத்தக கண்காட்சி அரங்கத்தில் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா.சுப்பிரமணி எழுதிய, கின்னஸ் கலைஞர் என்ற நூலை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட, மேனாள் காவல்துறை இயக்குநர்.சைலேந்திரபாபு தமிழ் நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். ஆங்கில நூலின் முதல் பிரதியை உலக செஸ் சாம்பியன் குகேஷ் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம் மற்றும் குன்றகுடி அடிகளார் ஆகியோர் கலந்துக் கொண்டார்.