Skip to main content

முன்பே நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வழிவகுத்தோம் காங்கிரஸ் ஒத்துழைக்கவில்லை! தம்பிதுரை

Published on 21/07/2018 | Edited on 21/07/2018

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை  சந்தித்த துணை சபாநாயகர் தம்பிதுரை பேசுகையில்,

 

thambi

 

 

 

மக்கள் கொடுத்த ஆட்சியயை இடையில் பறிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை. ஆந்திரமாநில தெலுங்கு தேசம்கட்சி  தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்ற நோக்கில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது. இதேபோல் அதிமுக சார்பில் நாங்களும் காவிரி நதிநீர் பிரச்சனையில் எந்த சமூகமுடிவையும் எடுக்காத மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முன்பே முடிவெடுத்திருந்தோம். ஆனால் காவிரி பிரச்சனைக்காக கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு காங்கிரஸ் ஆதரித்திருந்தால் கண்டிப்பாக விவாதம் நடந்திருக்கும். ஆனால் திமுகவுடன் உள்ள உறவினால் எங்கே அதிமுவிற்கு நற்பெயர் கிடைத்துவிடுமோ என்ற நோக்கில் தீட்டப்பட்ட சதித்திட்டதால் எங்களுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கவில்லை.

 

 

 

அதிமுகவை பொறுத்தவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த ஆட்சியையும் யாரும் பறிக்க உரிமையில்லை. தற்போது காவேரி விவகாரத்தில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் கொண்டுவந்துள்ளது எனேவ இவ்வாறு ஆவண செய்துள்ளதால் மத்திய அரசின் மீது காங்கிரஸ் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கவில்லை. இதனால் அதிமுக பாஜவை ஆதரிக்கிறது என்றில்லை. மக்கள் கொடுத்த ஆட்சியை ஆட்சி முடியும் வரை ஆள வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு  இன்னும் 6 மாதத்தில் தேர்தல் வருகிறது அப்போது மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் இனி யார் ஆளவேண்டும் என்று அவர்கள் தான் எஜமானர்கள் எனக்கூறினார்.   

சார்ந்த செய்திகள்