Skip to main content

மூன்றில் ஒரு பங்கு.. மணல் கொள்ளையில் பங்கு போடும் அதிகாரிகள்..?!!!

Published on 25/11/2019 | Edited on 25/11/2019

மணல் அள்ளக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு அமலில் இருக்க, அந்த உத்தரவினை செயல்படுத்தக் கூடிய வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகளோ, நீதிமன்ற உத்தரவினை காற்றில் பறக்கவிட்டு, பங்கீட்டு அடிப்படையில் மணல் திருடர்களுடன் கூட்டணிப் போட்டு மணல் கொள்ளையில் ஈடுப்பட்டு வருவது வேதனையே என்கின்றனர் எட்டையபுரம் மக்கள்.

 

sand digging in tuticorin

 

 

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் தாலுகாவிலுள்ள பீக்கிலிபட்டி அருகேயுள்ளது வைப்பாற்றின் துணை ஆறு. விருதுநகர் மாவட்டம் நள்ளியில் துவங்கும் இந்த ஆறு தூத்துக்குடி மாவட்டம் கீழ்நாட்டுக்குறிச்சி அருகே வைப்பாற்றில் இணைகிறது. இங்கு தான் தங்களது படை பலத்தின் துணைகொண்டும், அதிகாரிகள் சிலரின் ஆதரவும் கொண்டு மணலை தோண்டி, டிராக்டர் தொடங்கி டாடா ஏஸ், மாட்டுவண்டி வரை அனைத்திலும் கடத்தி வருகின்றனர் மணல் திருடர்கள். உபரி மண் எனும் பெயரில் கீழ்நாட்டுக்குறிச்சி - 038 ஏக்கரில் புல எண் 166/1 என்கின்ற இடத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை. 04/12//2019 வரை அனுமதியுள்ள இந்த ஆணையின் கீழ் உபரி மண்ணை எடுக்கின்றோம் எனும் பெயரில் ஆற்றுமணலை சுரண்டி, அங்கேயே சலித்து ஆற்றுமணல் ரூபாய் ஆறாயிரத்திற்கும், உபரி மணல் ரூ.3 ஆயிரத்திற்கும் விற்பனை செய்து வருகின்றனர் மணல் கொள்ளையர்கள்.

கீழ் நாட்டுக்குறிச்சி மற்றும் பீக்கிலிப்பட்டி மக்களோ," உபரி மண் எனும் பெயரில் ஆற்றுமணலை திருடி விற்கின்றனர். இவர்கள். உயர் நீதிமன்ற உத்தரவு இருப்பினும் அதனை கருத்தில் கொள்வதில்லை இங்குள்ள வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் சிலர். ஏனெனில், விற்பனையில் மூன்றில் ஒரு பங்கு என கூட்டணிப் போட்டுள்ளார்கள் அவர்கள். இதுப்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அனுப்பியும் எவ்வித நடவடிக்கைகளும் இல்லை." என்கின்றனர்.மேலும்,  "அதிகாரிகள் மாறுவது எப்போது" என கேள்வியும் எழுப்புகின்றனர் அவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்