
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், 7 மணிக்குள் தமிழ்நாட்டில் சென்னை உட்பட 27 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதிகளில் விட்டு விட்டு கனமழையும், கடலோரப் பகுதிகளில் பலத்த மழை தற்போது பெய்து வருகிறது. மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம், அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், செய்யூர், பனையூர், சூனாம்பேடு உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பொழிந்து வருகிறது.