Skip to main content

9 மாத குழந்தையை கொன்று விட்டு தாய் எடுத்த துயரமான முடிவு; தருமபுரியில் பரபரப்பு!

Published on 08/05/2025 | Edited on 08/05/2025

 

tragic decision of a mother to incident her 9-month-old baby

தருமபுரி மாவட்டம் பொம்மிடி வடந்தையூர் பகுதியைச் சேர்ந்தவர் அக்பர்(27). போட்டோ ஸ்டுடியோவில் வேலை செய்துவரும் அக்பருக்கும் தஸ்லீம் பானு(20) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்த் தம்பதிக்கு 9 மாத ஆண்குழந்தை ஒன்று இருந்துள்ளது.  இந்த நிலையில் கணவர் அக்பருக்கும் மனைவி முஸ்லீமுக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதன் காரணமாக கணவருடன் கோபித்துக்கொண்டு தஸ்லீம் மஞ்சவாடியில் உள்ள தனது தாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அதன்பிறகு அக்பர் மற்றும் அவரது வீட்டு பெறியவர்கள் சமாதானம் பேசி தஸ்லீம் பானுவை அக்பரின் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை அக்பர் வெளியே சென்று வீட்டிற்கு வந்துள்ளார். கதவு உள்தாழ்ப்பால் போடப்பட்டிருந்ததால், இடுக்கின் வழியாக பார்த்துள்ளார். அப்போது தஸ்லீம் பானு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். 

இதனால் கடும் அதிர்ச்சியடைந்து வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று அக்பர் பார்த்தபோது, அருகே 9 மாத ஆண்குழந்தையின் கையில் பீளேடால் அறுக்கப்பட்டு உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளது. இதனைப்பார்த்து அக்பர் கதறி அழுதுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் குடும்பத் தகராறு காரணமாக குழந்தையை கொன்று விட்டு தஸ்லீம் பானு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்