Skip to main content

பழங்கற்கால கற்கோடாரி, பானை குறியீடுகள் கிடைத்த இடத்தை அகழாய்வு செய்ய வட்டாட்சியர் உறுதி...

Published on 08/10/2019 | Edited on 08/10/2019

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள பாலகிருஷ்ணபுரம் – மாத்தூர் ராமசாமிபுரம், தஞ்சை மாவட்டம் மணக்காடு ஆகிய கிராமங்களுக்கு மத்தியில் ஓடும் வில்லுனி ஆற்றங்கரையில் சுமார் 173 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடம் அம்பலத்திடல்.  

 

puthukottai excavation plans

 

 

அந்த திடலில் வன்னி மரங்கள் அடர்ந்து காணப்படுவதுடன் முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்ட புதைவிடங்கள் உள்ளது. முதுமக்கள் தாழிகள் சுண்ணாம்பு கட்டுமானத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சுடுசெங்கல் கட்டுமானங்களும் காணப்படுகிறது.

இந்த இடங்கள் பற்றி கடந்த 2014 ம் ஆண்டும், 2016 ம் ஆண்டும் நக்கீரன் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டிருந்தோம். முதுமக்கள் தாழிகளில் உள்ள கருப்பு சிவப்பு பானை ஓடுகளில் தழைகீழ் ஏணி போன்ற குறியீடுகள் உள்ளது. அதனால் இது எழுத்து காலத்திற்கு முந்தைய குறியீடு காலம் என்று புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகம் ஆய்வுக்கு பிறகு கூறினார்கள். இன்று அதே நிறுவனம் நடத்திய ஆய்வில் பழங்கற்கால கற்கோடாரி கண்டெடுக்கப்பட்டது. 

கண்டெடுக்கப்பட்ட கற்கோடாரியை அறந்தாங்கி வட்டாட்சியர் சூரியபிரபுவிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த கற்கோடாரி இரும்பு காலத்திற்கு முன்பு, அதாவது சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நாகரீக சமூகம் பயன்படுத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அரசு அகழாய்வு செய்தால் இன்னும் பல வரலாற்று சான்றுகளை காணலாம் என்றும் கூறினார்கள். 

இந்த நிலையில்  மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி அனுமதியுடன் அம்பத்திடலுக்கு வந்த அறந்தாங்கி வட்டாட்சியர் சூரியபிரபு முழு திடலையும் சுற்றிப் பார்த்த பிறகு.. செய்தியாளர்களிடம் பேசும் போது, "முதுமக்கள் தாழிகள், மனிதர்கள் வாழ்விடங்களாக கட்டுமானப் பகுதிகள் இருக்கிறது. இவற்றை ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்று சான்றுகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. அதனால் தொல்லியல் துறை அனுமதியுடன் ஒரு வாரத்தில் அகழாய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 

சுமார் 15 வருடங்களாக இந்த இடத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் இன்ற பழங்கற்கால கற்கோடாரி கண்டெடுக்கப்பட்ட தகவல் அறிந்து ஆய்வுக்கு வந்துள்ளனர். அதிகாரிகள் தாமதம் செய்த காலங்களில் ஆக்கிரமிப்புகள் தான் அதிகமாகி உள்ளது. அதனால் உடனடியாக ஆய்வுகள் செய்ய முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்றார்கள் கிராம மக்கள் . மேலும் இதே வில்லுனி ஆற்றங்கரையில் திருநாளூர் கிராமத்திலும் 

இதே போன்ற முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்டு தற்போது சிதைக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 

 

ad

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து! - கவனம் கொடுக்குமா அரசு?

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
 Will the government pay attention? children's lives!

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி சாலையில் உள்ளது முத்துப்பட்டினம் என்கிற சின்னக் கிராமம். இங்குள்ள குழந்தைகள் வெகுதூரம் சென்று தொடக்கக் கல்வி கற்க வேண்டும் என்பதால் அதே ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 2 வகுப்பறைக் கட்டடம் மற்றும் ஒரு வகுப்பறை கட்டடம் உள்ளது. இதில் 2 வகுப்பறைக் கட்டடத்தின் மேற்கூரை காங்கிரீட், சிமெண்ட் பூச்சுகள் கடந்த சில வருடங்களாகவே உடைந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் குழந்தைகளை அந்த வகுப்பறைகளில் வைக்க அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

உள்பக்கத்தின் மேல் சிமெண்ட் பூச்சுகள் உடைந்து கொட்டி துருப்பிடித்த கம்பிகளும் தொங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் இருக்கும் போது கொட்டாமல் இரவில் கொட்டுவதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதுவரை பாதிப்பு இல்லை. இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு வேறு கட்டடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து வைக்கும் கோரிக்கை ஏனோ அதிகாரிகள் கவனம் பெறவில்லை. 

அதிகாரிகளின் அலட்சியத்தால் தினம் தினம் திக் திக் மனநிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர். தலைக்கு மேலே ஆபத்து இருக்கும் போது எப்படி நிம்மதியாக படிக்க முடியும் மாணவர்களால். கவனம் எல்லாம் இடிந்து கொட்டும் மேற்கூரை மேலே தானே இருக்கும். பெற்றோர்களும் கூட கூலி வேலைக்குச் சென்ற இடத்திலும் பள்ளியில் தங்கள் குழந்தைகளின் நிலை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ அரசுப் பள்ளிகளை அரசு நிதியை எதிர்பார்க்காமல் அந்தந்த ஊர் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் தங்கள் சொந்தச் செலவில் மாணவர்களின் நலனுக்காக கட்டடம், திறன் வகுப்பறைகள் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களின் உயிர் காக்க அரசோ அல்லது தன்னார்வலர்களோ உடனே ஒரு இரண்டு வகுப்பறைக் கட்டடம் கட்டிக் கொடுக்க முன்வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் அந்த கிராம மக்கள். 

Next Story

“கீழடி அகழாய்வு பொருட்களைத் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்” - உயர்நீதிமன்றம்

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
keezhadi excavation materials should be handed over to the TN govt says High Court 

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2013 முதல் 2016 வரை மத்திய அரசு சார்பில் முதல் 2 கட்ட அகழாய்வு நடத்தப்பட்டது. இந்த அகழாய்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த அகழாய்வானது தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றன. அதன் பின்னர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் இந்த அகழாய்வு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட 982 பக்கங்கள் கொண்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டன. இருப்பினும் இதுவரை இந்த அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படாமல் உள்ளது. அதேபோன்று அகழாய்வின் போது கிடைத்த பொருட்களும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படாமல் இருந்து வருகிறது.

இத்தகைய சூழலில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் மதி என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், “கீழடி அகழாய்வில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை மீண்டும் பணியமர்த்த வேண்டும். இரண்டாம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களை தமிழக அரசிடம் மத்திய அரசு ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா தலைமையிலான அமர்வு முன்பு இன்று (29.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கீழடி இரண்டாம் கட்ட அழகாய்வின் போது கிடைத்த 5 ஆயிரத்து 765 அகழாய்வு பொருட்களும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும்” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட்ட பின் மத்திய தொல்லியல் துறையிடம் உள்ள கீழடியின் இரண்டாம் கட்ட அகழாய்வின் போது கிடைத்த 5 ஆயிரத்து 765 அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.

முன்னதாக தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த பிரபாகர் பாண்டியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா தலைமையிலான அமர்வு முன்பு கடந்த 26 ஆம் தேதி (26.02.2024) விசாரணைக்கு வந்தது.

keezhadi excavation materials should be handed over to the TN govt says High Court 

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “கீழடியில் மத்திய அரசு மேற்கொண்ட அகழாய்வு குறித்த அறிக்கைகள் தயாரிக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. 9 மாதங்களில் அறிக்கை வெளியிடப்படும்” எனத் தெரிவித்திருந்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்திருந்த உத்தரவில், “கீழடியில் நடத்தப்பட்ட முதல் 2 கட்ட அகழாய்வு குறித்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை 9 மாதங்களில் பொது வெளியில் வெளியிட வேண்டும்” என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.