Skip to main content

மீண்டும் ஒருமுறை உலக சாம்பியனை வீழ்த்திய பிரக்ஞானந்தா 

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

Praggnanandhaa

 

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் என்ற அதிவேக செஸ் போட்டி ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் மொத்தம் 16 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தத் தொடரின் ஐந்தாவது சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த இளம்வீரர் பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். இப்போட்டியில் கறுப்பு நிற காய்களுடன் பிரக்ஞானந்தா விளையாடினார்.

 

போட்டியின் 40ஆவது காய் நகர்த்தலில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றியை தன்வசப்படுத்தினார். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ஆன்லைன் தொடரில் மேக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தியிருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, பிரக்ஞானந்தாவிற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர்! முதல்வர் பாராட்டு!

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Vaishali on becoming the first female Grandmaster from Tamilnadu

 

இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டராக  தமிழகத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் செஸ் எல்லோபிரேகாட் ஓபன் போட்டியில் 2 தொடர்  வெற்றியின் மூலம் கிராண்ட் மாஸ்டர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். இதன்மூலம் இவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் தமிழக வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். வைஷாலி 2501.5 செஸ் ரேட்டிங் பெற்று பெண்கள் செஸ் தரவரிசைப் பட்டியலில் உலகத்திலேயே 11ஆவது இடத்திலும், இந்திய அளவில் 2ஆவது இடத்திலும் உள்ளார். வைஷாலி, பிரபல தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் வைஷாலியை முதல்வர் ஸ்டாலின் பாராட்டி வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “மகத்தான வாழ்த்துக்கள் வைஷாலி, இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட்மாஸ்டர் மற்றும் தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனார். 2023 உங்களுக்கு சிறப்பாக அமைந்தது. உங்கள் சகோதரர் பிரக்ஞானந்தா உடன் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் சகோதரி சகோதரர் ஜோடியாக நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள்.

 

கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் உடன் பிறந்த ஜோடியாக வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். உங்களின் சாதனைகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், உங்கள் குறிப்பிடத்தக்க பயணம் செஸ் ஆர்வலர்களுக்கு ஒரு உத்வேகமாகவும், நம் மாநிலத்தில் பெண்கள் அதிகாரம் பெற்றதற்கான சான்றாகவும் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

Next Story

செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

PM Modi praises chess player Pragnananda

 

பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) நடத்திய 10 ஆவது சதுரங்க உலகக் கோப்பை 2023, கடந்த ஜூலை 30 வெகு விமரிசையாகத் தொடங்கி அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டி வரை சென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெள்ளிப் பதக்கம் வென்றார். கார்ல்சன் - பிரக்ஞானந்தா மோதிய உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் முதல் சுற்று டிராவில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் சுற்றும் டிராவில் முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற செஸ் டை பிரேக்கர் சுற்றில் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா வீழ்ந்த நிலையில், இரண்டாம் சுற்று டிராவில் முடிந்தது. இதனால் நார்வே நாட்டின் கார்ல்சன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

 

இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு பல தரப்பிலிருந்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது வெள்ளிப் பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி இருந்தார்.

 

இந்நிலையில் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவையும், அவரது பெற்றோரையும் பிரதமர் மோடி தனது இல்லத்திற்கு அழைத்து நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து பிரக்ஞானந்தா தனது எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், “பிரதமரை சந்தித்தது  மிகவும் பெருமைக்குரிய தருணம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.