புதுச்சேரி சண்முகாபுரத்தை சேர்ந்த நெப்போலியன் (வயது 26) என்பவர் தனியார் பள்ளி ஒன்றில் டேபிள் டென்னிஸ் பயிற்சியாளராக பணியாற்றுகிறார். இவரிடம் பயிற்சிக்கு வந்த ஆறாம் வகுப்பு மாணவிக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்தாக புகார் எழுந்தது.

இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் புதுச்சேரி குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் அக்குழுவின் தலைவர் ராஜேந்திரன் விசாரணை நடத்தினார். விசாரணையில் நெப்போலியன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருப்பது உண்மை என தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அபூர்வா குப்தாவிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்றுக்கொண்ட அவர் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க முதலியார்பேட்டை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி முதலியார் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பயிற்சியாளர் நெப்போலியனை கைது செய்தனர். பின்னர் புதுச்சேரி நீதிமன்றத்தில் நெப்போலியனை ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தன.