Published on 20/04/2018 | Edited on 20/04/2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், சிறுமிகள் மீதான பாலியல் கொடுங்கரங்களை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், மாற்று ஊடக மையம், வீடு, கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வெள்ளியன்று (ஏப். 20) பறை முழக்கமும், கவிதைகளும், ஓவியமும் வரையப்பட்டன. இதில் ஓவியர்கள் விஸ்வம், ஜெ.கிருஷ்ணமூர்த்தி, வின்சி, எழுத்தாளர்கள் பாரதி கிருஷ்ணகுமார், கரண்கார்க்கி, இயக்குநர் அஜயன்பாலா, கவிஞர்கள் திலகவதி, மனுஷி, தமுஎகச மாநில துணை செயலாளர் கி.அன்பரசு, கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா கசாலி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
