Skip to main content

குடிநீா் கேட்டு எம்எல்ஏ தலைமையில் நாகர்கோயில் மாநகராட்சி மக்கள் சாலை மறியல்

Published on 19/06/2019 | Edited on 19/06/2019

 

        தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக குடிநீா் பிரச்சினை தலை விாித்தாடுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீாின்றி அவதி பட்டு வருகிறாா்கள். நீா் ஆதாரங்கள் எல்லாம் தண்ணீாின்றி வறண்டு கிடக்கிறது. இதற்கு போா்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசு வேடிக்கை பாா்த்து கொண்டிருப்பதாக பொது மக்களும் எதிா் கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றனா். 

k

         

 இந்த நிலையில் நாகா்கோவில் மாநகராட்சியில் பெரும் பாலான பகுதிகளுக்கு  18 நாட்களாகியும் குடிநீா் இல்லாமல் மக்கள் கஷ்டப்பட்டு் வருகின்றனா். இதனால் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் மக்கள் செய்வதறியாமல் திகைக்கின்றனா். இந்த மாநகராட்சிக்கு குடிநீா் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணையில் இருந்து தண்ணீரை கொண்டு வர மாநகராட்சி நிா்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். கடந்த சில நாட்களாக பெய்த தென்மேற்கு பருவமழையில் முக்கடல் அணைக்கு நீா் வரத்தும் வந்துள்ளது.

 

k

         

 இந்த நிலையில் 18 நாட்களாக குடிநீாின்றி கஷ்டப்படும் மாநகராட்சி மக்கள் எம்எல்ஏ சுரேஷ்ராஜன் தலைமையில் இன்று வடசோி சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அந்த பகுதியில் பரபரபப்பு ஏற்பட்டது. 

 

k

           இதை தொடா்ந்து சுரேஷ்ராஜன் உட்பட 500-க்கு மேற்பட்டவா்களை போலிசாா் கைது செய்தனா். 

 

சார்ந்த செய்திகள்