Published on 06/09/2018 | Edited on 06/09/2018

ஏழு பேரை விடுதலை செய்வது குறித்த உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு விவரம் தெரிவிக்கப்பட்டதும் வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி என்ன நினைக்கிறார்கள் என சோர்ஸ்கள் மூலம் விசாரித்தபோது,
சிறை அதிகாரிகள் தீர்ப்பு விவரத்தை கூறியதும் சாந்தன் பாபா கோயிலுக்கு சென்றுவிட்டார்.
அம்மன் பக்தராகிவிட்ட முருகன், விவரம் கூறியதும் கண்ணீர் விட்டவர், சிலரை கட்டிப்பிடித்து மகிழ்ந்து விஷயத்தை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
பேரறிவாளனுக்குத்தான் இந்த விவரம் முதலில் தெரியவந்துள்ளது. அவர் நீண்ட சட்டப்போராட்டத்துக்கு வெற்றி கிடைச்திருக்கு, தமிழக அரசுக்குத் தான் நன்றி சொல்லணும். எங்க விவகாரத்தில் அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று நினைக்கிறோம் என கூறியதாக கூறுகின்றனர்.