Skip to main content

உப்புமாவில் விஷம்;கல்லூரி மாணவியை திருமணம் செய்ய கட்டிய பேராசிரியர் மனைவியை கொன்ற கணவர் கைது

Published on 07/03/2019 | Edited on 07/03/2019

கல்லூாி மாணவியை திருமணம் செய்து கொள்ள மனைவியை விஷம் வைத்து கொலை செய்த பேராசிாியா் கைது செய்யப்பட்டாா்.

          

 A man who killed a professor's wife who was forced to marry a college student was arrested

 

குமாி மாவட்டம் மேக்காமண்டபம் வியன்னூா் பகுதியை சோ்ந்த ஓய்வு பெற்ற தாசில்தாா் ஜான் அலெக்சாண்டாின் மகள் திவ்யா சில்வெஸ்டா்(29) கருங்கலில் தனியாா் கல்லூாியில் பேராசிாியராக பணிபுாிந்து வந்தாா். இவருக்கும் வெள்ளிகோடு பகுதியை சோ்ந்த பெல்லாா்மினுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. பெல்லாா்மின் மாா்த்தாண்டத்தில் உள்ள ஓரு பொறியியல் கல்லூாியில் பேராசிாியராக பணிபுாிந்து வருகிறாா். 

           

 

பெல்லாா்மின் அதே கல்லூாியில் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வருகிறாா். இது மனைவி திவ்யா சில்வெஸ்டா்க்கு தொியவர அவா் கணவனை கண்டித்துள்ளாா். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வருமாம். மேலும் பெல்லாா்மின் நான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்ய போகிறேன் என அடிக்கடி திவ்யா விடம் கூறிவருவாராம். 

 

 A man who killed a professor's wife who was forced to marry a college student was arrested

 

இதற்கு திவ்யா நான் இருக்கும் வரை அது நடக்காது என கூறுவாராம். அப்போது பெல்லாா்மின் உன்னை கொலை செய்து விட்டு அவளை திருமணம் செய்து கொள்வேன் என கூறி வந்தாராம். 

          

 

இந்த நிலையில் நேற்று காலை திவ்யா வீட்டில் தயாா் செய்து வைத்திருந்த உப்புமாவை சாப்பிட்டு விட்டு கல்லூாிக்கு மோட்டாா் சைக்கிளில் செல்லும் வழியில் வாயில் நுரைதள்ளி மயக்கம்  போட்டு கீழே விழுந்தாா். இதை பாா்த்தவா்கள் திவ்யாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது திவ்யா இறந்தது தொியவந்தது. 

        

 

இது குறித்து திவ்யாவின் தந்தை ஜான் அலெக்ஸ்சாண்டா்  தக்கலை போலிசில் புகாா் கொடுத்ததன் அடிப்படையில், போலிசாா்  பெல்லாா்மினை பிடித்து  விசாாித்ததில் காதலியை திருமணம் செய்வதற்காக  உப்புமாவில் விஷம் வைத்து மனைவியை கொலை செய்ததாக ஒப்பு கொண்டாா். இதை தொடா்ந்து பொல்லாா்மினை கைது செய்த போலிசாா் தலைமறைவான காதலியையும் தேடி வருகின்றனா்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

94,737 மது பாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் அழிப்பு

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
94,737 bottles of liquor destroyed by road roller

அண்மையில் நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த நேரத்தில் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் ஒன்றாக சேர்த்து கிடங்கில் வைத்திருந்தனர்.

அந்தப் பாட்டில்கள் ரோடு ரோலர் வாகனம் கொண்டு உடைத்து அழிக்கப்பட்டது. சுமார் 94,737 மது பாட்டில்கள் தேர்தல் நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் என போலீசார் தெரிவித்துள்ளனர். மது பாட்டில்கள் சாலையில் அடுக்கி வைக்கப்பட்டு ரோடு ரோலர் வைத்து நொறுக்கப்பட்டு அழிக்கப்படும் அந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

காரில் வைத்து மது விற்பனை; சென்னையில் பகீர்

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Sale of liquor from the car; Bagheer in Chennai

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 60க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் திருமண மண்டபம் ஒன்றின் அருகே பட்டப்பகலில் காரில் வைத்து சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதும் அதைப் பொது இடத்தில் வாங்கி சிலர் அருந்துவது தொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.