Skip to main content

கொடநாடு வழக்கில் ஜெ.வின் தனி உதவியாளர் ஆஜர்

Published on 06/05/2025 | Edited on 06/05/2025
J.'s personal assistant appears in Kodanad case

நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் அவரின் மறைவிற்கு பிறகு கடந்த 2017 ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக தற்பொழுது வரை விசாரணை நடைபெறுகிறது. இது தொடர்பான வழக்கு  ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கையிலெடுத்து விசாரித்து வருகின்றனர்.

சிபிசிஐடி, ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான காவல்துறையினர் 300 க்கும் மேற்பட்டோரிடம் இந்த வழக்கில் வாக்குமூலம் பெற்றுள்ளனர். கோடநாடு சம்பவம் தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முதன்மைப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாள் என்பவருக்கு அண்மையில் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதேபோல் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனி உதவியாளராக இருந்த பூங்குன்றன் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். 

சார்ந்த செய்திகள்