
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அருப்புமேடு பகுதியை சேர்ந்தவர் 20 வயதான தினேஷ். அவரது மனைவி கீர்த்தனா. இவர்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காதல் திருமணம் செய்துகொண்டனர். அதன்பின் கடந்த மார்ச் மாதம் கர்ப்பமாகி தற்போது இரண்டு மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில் இன்று மதியம் கீர்த்தனாவுக்கு பிக்ஸ் மற்றும் வயிற்று வலி காரணமாக வேலூர் அரசு பழைய பென்ட்லேண்ட் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது அந்த கர்ப்பிணி பெண் அழைத்து வந்த ஐந்து நிமிடத்தில் பிரசவ அறையில் இருந்து சிறுநீர் கழிக்க செல்வதாக கூறி கழிப்பறைக்கு சென்றவர் நீண்ட நேரம் வரவில்லை.
அவரது கணவர் அங்கு சென்று பார்த்தபோது, கழிவறையில் உள்ள ஜன்னலில் அந்தப் பெண் வைத்திருந்த துப்பட்டாவில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்று உள்ளார். நீண்ட நேரம் கதவை தட்டியும் வராததால் ஜன்னல் கதவு வழியாக பார்த்தபோது தூக்கு மாட்டிக் கொண்டிருப்பது தெரியவந்தது. அவர் அலறித் துடித்து கத்தி கதறினார். மக்கள் ஓடிவந்தனர். பின்பு கழிவறையின் சுவரை எகிறி குதித்து அந்தப் கர்ப்பிணியை மீட்டு மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்பு அந்த கர்ப்பிணிப் பெண்ணை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அந்தப் பெண் உயிரிழந்ததாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த வேலூர் தெற்கு காவல் துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். கர்ப்பிணி பெண் எதற்காக கழிவறைக்குள் சென்று தற்கொலை செய்து கொண்டார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.