சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திரமோடி வருகையின் போது எதிர்பார்த்ததை விட சிறப்பாக போலீசார் பணியாற்றினார் காவல் ஆணையர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மேலும் பாதுகாப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்ட போலீசாரை சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் வாக்கி டாக்கியில் பாராட்டினார். சீன அதிபர் ஷி ஜிங்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டு நாள் வருகைக்காக காவல்துறையினர் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தமிழக டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா உள்ளிட்டோருக்கு முதல்வர் பாராட்டு. சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வருகைக்காக சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்ததால், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்துக்கு மூவரையும் நேரில் அழைத்து பாராட்டினார்.