Skip to main content

விஜய் சேதுபதியின் சங்கதமிழனுக்கு நெல்லையில் தடை!

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

விஜயா புரடெக்ஷன் தயாரிப்பில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி, நாளை ரிலீசாகவுள்ள சங்கத்தமிழன் திரைப்படத்தினை நெல்லை மாவட்டத்தில் திரையிட நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

பழம் பெரும் நிறுவனமான விஜயா புரடெக்ஷன் தயாரிப்பில் நடிகர் விஜய்சேதுபதி, ராக்ஷி கன்னா, நிவேதா பெத்துராஜ், சூரி மற்றும் நாசர் உள்ளிட்ட நடிகர்களை கொண்டு விஜயசந்தர் எனும் இயக்குநரால் திரைப்படமாக்கப்பட்ட சங்கத்தமிழனை விநியோகிக்கும் உரிமையை லிப்ரா நிறுவனம் பெற்றுள்ளது. 

sangathamizhan actor vijay sethupathi film released ban with nellai district court

 

கடந்த 2011ஆம் ஆண்டு நலனும் நந்தினியும் என்ற திரைப்படத்தை எடுத்த லிப்ரா புரொடக்சன் உரிமையாளர்  ரவீந்தர் சந்திரசேகரன் என்பவர் நெல்லையைச் சார்ந்த விக்னேஷ் புரோடக்சன் உரிமையாளர் அன்பழகன் என்பவரிடம் 15 லட்ச ரூபாய் படத்திற்காக கடன் பெற்றிருந்தார். ஆனால் கடன் கொடுத்த அன்பழகன் இறந்துவிடவே அவரது மகன் விக்னேஸ்வரன் லிப்ரா புரொடக்சனிடம் பணம் கேட்டு வந்துள்ளார்.  திருநெல்வேலி மண்டல பட விநியோகஸ்தர் சங்கமும் இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. கடந்த நவம்பர் எட்டாம் தேதி மிக மிக அவசரம் எந்த திரைப்படம் லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பில் வெளியானது. இந்த படம் வெளியானவுடன் பணத்தை கொடுத்து விடுவதாக உறுதி அளித்திருந்தனர். 

vijayasethupathi



இந்த நிலையில் பணம் கொடுக்காததால் நெல்லை முதலாவது உரிமையியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி நாளை வெளியாக உள்ள சங்கத்தமிழன் படத்தை நெல்லை மாநகர பகுதியில் உள்ள இரண்டு திரையரங்குகளிலும் வருகிற 21 ஆம் தேதி வரை வெளியிட தடை விதித்து உள்ளார்.
 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.