Skip to main content

ஜெர்மனி மாணவர் வெளியேற்றத்துக்கு திமுக மாணவர் அணி கண்டனம்!

Published on 24/12/2019 | Edited on 24/12/2019

குடியுரிமைப் போராட்டங்களில் பங்கேற்றதற்காக ஜெர்மன் மாணவர் ஜேக்கப் லிண்டென்தாலை கல்வி விசா காலம் முடிவதற்கு முன்னரே இந்தியாவை விட்டு வெளியேற்றியதை திமுக மாணவர் அணி இணைச் செயலாளர் ஜெரால்டு கண்டித்துள்ளார்.
 

IIT MADRAS GERMANY STUDENT CAA DMK PARTY

 

மாணவர் ஜேக்கப்பை சென்னை ஐஐடி நிர்வாகமும் அழைத்து விசாரிக்கவில்லை. குடியேற்ற அதிகாரிகளும் முறைப்படி அழைத்து விசாரிக்கவில்லை. எந்த விதிகளையும் பின்பற்றாமல் அவரை நாட்டைவிட்டு வெளியேற்றி இருப்பது கண்டிக்கத்தக்கது. வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்கள் கூட குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து போராடுகிறார்கள். 

IIT MADRAS GERMANY STUDENT CAA DMK PARTY

அவர்கள் ஏன் இன்னொரு நாட்டு பிரச்சனைக்காக இங்கே போராடுகிறார்கள் என்று சம்பந்தப்பட்ட நாடுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், ஒரு ஜெர்மன் மாணவர் விசா விதிகளையே மீறியிருந்தாலும் அவரை கண்டித்து எச்சரித்து படிப்பைத் தொடர அனுமதிக்காமல் அவசர அவசரமாக நாட்டைவிட்டு வெளியேற்றியது கண்டிக்கத்தக்கது என்று ஜெரால்டு கூறினார். அவர் விசா விதிகளை மீறியதற்காக வெளியேற்றப்பட்டார் என்பதைக் காட்டிலும், அவர் கையில் வைத்திருந்த பதாகைக்காகவே வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்றே சக மாணவர்கள் கருதுவதாகவும் ஜெரால்டு கூறியிருக்கிறார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை ஐஐடியில் தொடரும் தற்கொலை; அடுத்தடுத்த சம்பவங்களால் மாணவர்கள் அதிர்ச்சி

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

madras iit student incident police investigation started and shocking in students 

 

சென்னை கிண்டியில் உள்ள சென்னை ஐஐடியில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த  ருவன் சன்னி ஆல்பர்ட் (வயது 25) என்ற மாணவர்  எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக மன அழுத்தத்தால் காணப்பட்ட இவர் தனது ஆய்வு வகுப்புகளுக்கு சரிவர வராமல் இருந்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம்போல் வகுப்புகளை முடித்துவிட்டு விடுதிக்குச் சென்ற இவர் இரவு உணவு அருந்துவதற்கு அறையில் இருந்து வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது சக நண்பர்கள் ருவன் சன்னி ஆல்பர்ட் அறைக்குச் சென்று பார்த்தபோது, அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 

இதனைத் தொடர்ந்து சக மாணவர்கள் இதுகுறித்து விடுதியின் காப்பாளர் மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தந்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு கோட்டூர்புரம் காவல்துறையினர் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவரின் அறையில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது மாணவன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், 'என்னால் சரிவர படிக்க இயலவில்லை; உணவு அருந்த முடியவில்லை; என்னை மன்னித்து விடுங்கள்.' என்று எழுதி வைத்திருக்கிறார். மேலும் போலீசார் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், சென்னை ஐஐடியில் பி.டெக் முதலாமாண்டு படித்து வரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வீரேஷ் (வயது 21) என்ற மாணவர் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மனக் குழப்பத்தில் இருந்து வந்த நிலையில் தனது அறையில் தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மயக்க நிலையில் இருந்த மாணவனை மீட்டு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

சென்னை ஐஐடியில், பேராசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், சென்னை ஐஐடியில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பேராசிரியர் உட்பட 11 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. சென்னை ஐஐடியில் தொடர்ந்து தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி சம்பவங்கள் ஏற்படுவதால் அங்கு படித்து வரும் மாணவ மாணவியர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Next Story

பாலியல் புகார்: சென்னை ஐ.ஐ.டி.யில் ஒருவர் கைது! 

Published on 02/08/2022 | Edited on 02/08/2022

 

student incident madras iit police investigation

 

பாலியல் தொந்தரவு தொடர்பாக மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை ஐ.ஐ.டி.யில் ஒருவரை கைது செய்தது காவல்துறை. 

 

ஜூலை 24- ஆம் தேதி அன்று சென்னையில் ஐ.ஐ.டி.யில் பயின்று வரும் மாணவி ஒருவர், ஐ.ஐ.டி. வளாகத்தில் சென்று கொண்டிருந்த போது, அந்த மாணவிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் பரவியது. 

 

பாலியல் தொந்தரவு தொடர்பாக, மாணவி தரப்பில் புகார் அளிக்க முன்வராததையடுத்து ஐ.ஐ.டி. வளாகத்தின் காவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

 

மேலும், ஐ.ஐ.டி. வளாகத்திற்கு சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, ஐ.ஐ.டி. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது, ஐ.ஐ.டி. வளாக கேண்டீனில் பணியாற்றும் இளைஞர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.