Published on 17/06/2018 | Edited on 17/06/2018

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொங்கர்பாளையத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் விழாவில் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட நூலகங்களில் ஐஏஎஸ் பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்புகளுக்கு ஜெர்மன், இங்கிலாந்து நாடுகளிலிருந்து பேராசிரியர்கள் வர இருக்கிறார்கள்’’ என்று தெரிவித்தார்.