Skip to main content

எத்தனை சந்திரபாபுநாயுடுகள் தோன்றினாலும் மோடிக்கு நிகராக முடியுமா?-தமிழிசை சவுந்தரராஜன்

Published on 04/11/2018 | Edited on 04/11/2018

 

TAMILISAI

 

எத்தனை சந்திரபாபுநாயுடுகள் தோன்றினாலும் மோடிக்கு நிகராக முடியுமா? என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

 

அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் வளர்ந்துவரும் நட்சத்திரம் என்ற விருதைப் பெற்றுள்ள பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம்  பேசுகையில்,  

 

ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு போல் எத்தனை சந்திரபாபு நாயுடு தோன்றினாலும் அது பிரதமர் மோடிக்கு நிகராகுமா?  எனக்கூறினார்.

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது துர்திஸ்டவசமானது எனக் கூறினார்.

 

அண்மையில் சந்திரபாபு நாயுடு  முக்கிய அரசியல் தலைவர்களான ராகுல் காந்தி, சரத்பவார், பரூக் அப்துல்லா ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்