Skip to main content

திவால் சட்டத்தினை திருத்தம் செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! 

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் ஸ்ரீ அம்பிகா சர்க்கரை ஆலை மற்றும் எ.சித்தூர் திரு ஆரூரான் சர்க்கரை ஆலைகள் நலிவுற்றதால், மத்திய அரசின் திவால் சட்டத்தின் படி,  கரும்பு விவசாயிகள் இயங்குமுறை கடனாளியாகவும், கரும்பு ஆலைக்கு கடன் கொடுத்த வங்கிகள் பாதுகாக்கப்பட்ட கடனாளராக கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் மத்திய அரசின் திவால் சட்டத்தின்படி, ஆலையை ஏலம் விடப்பட்டலோ அல்லது விற்கப்பட்டலோ,  ஆலைக்கு கடன் கொடுத்த வங்கி கடன் தொகையை அடைத்த பிறகு,  மீதமுள்ள தொகை இருந்தால் மட்டுமே கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.  

NON PERFOMING ASSET LAW WILL BE CORRECTION ON GOVERNMENT FARMERS REQUEST STRIKE


மேற்படி சட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு முன்னுரிமை தந்து, முன்னுரிமை கடன்தாரர்கள் என்கிற வகையில், கம்பெனி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விருத்தாசலம் பாலக்கரையில் கரும்பு விவசாயிகளை பாதுகாக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஆலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசின் திவால் சட்டத்தினை திருத்தம் செய்ய கோரியும் 100- க்கும் மேற்பட்ட விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளை ஈர்க்கின்ற வகையில் முழக்கங்கள் எழுப்பினர். 
 

NON PERFOMING ASSET LAW WILL BE CORRECTION ON GOVERNMENT FARMERS REQUEST STRIKE


மேலும் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலன் கருதி சட்டம் திருத்தம் செய்யாவிட்டால், தமிழகம் முழுவதும் உள்ள கரும்பு ஆலைகளின் முன்பு மாபெரும் நடத்தபோவதாக கூறியுள்ளனர். ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு முன்பு அவ்வழியாக சென்ற சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன்,  விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் கரும்பு நிலுவை தொகை பற்றி முன்னதாகவே தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், தற்போது திவால் சட்டத்தில் விவசாயிகள் எவ்வித நஷ்டம் அடையாமல், நிலுவைத் தொகை வழங்குவதற்கு, தமிழக முதல்வரிடம் பரிந்துரை செய்து உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற கடமைப்பட்டிருக்கிறேன் என்று கூறி சென்றார்.
 

இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க தலைவர்கள் கு.செல்லமுத்து, ஆர்.விருத்தகிரி, வேட்டவலம் மணிகண்டன், கார்மாங்குடி வெங்கடேசன், கே.வி.ராஜ்குமார், ஏ.பி.திருநாவுக்கரசு, கே.வி.இளங்கீரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

வேட்டி அணிந்து வந்ததால் அனுமதி மறுப்பு; போராட்டத்தில் குதித்த விவசாய சங்கம்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Denial of entry for wearing a vest in bangalore

கர்நாடகா மாநிலம், பெங்களூர் மாகடி சாலையில் ஜி.டி. வேர்ல்ட் என்ற தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில், நேற்று முன்தினம் (16-07-24) பகீரப்பா என்ற விவசாயி தனது மகன் நாகராஜுடன், அங்குள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டரில் படம் பார்க்க வந்துள்ளார். 

ஆனால், பகீரப்பா வேட்டி அணிந்து வந்திருந்ததால், அவரை உள்ளே செல்ல அனுமதிக்காமல் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது தொடர்பாக பகீரப்பாவும், அவரது மகனும் உள்ளே செல்ல அனுமதிக்குமாறு கேட்டுள்ளனர். ஆனாலும், அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும், வேட்டி அணிந்து வந்தததால் விவசாயிக்கு அனுமதி அளிக்காத வணிக வளாகத்திற்கு எதிராக கண்டனங்கள் எழுந்து வந்தது. இதனைத் தொடர்ந்து, கன்னட அமைப்பினர் மற்றும் விவசாய சங்கத்தினர், நேற்று அந்த தனியார் வணிக வளாகம் முன்பு போராட்டம் நடத்தினர். விவசாயியை வணிக வளாகத்திற்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதற்காக வணிக நிர்வாகம், விவசாயி பகீரப்பாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதனால், அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இது குறித்து காங்கிரஸ் அமைச்சர் சந்தோஷ் லாட் கூறியதாவது, ‘வேட்டி அணிந்து வந்த விவசாயி வணிக வளாகத்திற்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்திய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார். 

Next Story

விவசாயிகளே இல்லாமல் நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்!

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
Farmers' Grievance Meeting held without farmers!

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட தலைநகரில் மட்டுமின்றி ஒவ்வொரு கோட்டத்திலும் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அதாவது மாவட்ட தலைநகரில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலும் கோட்டங்களில் கோட்டாட்சியர் தலைமையிலும் நடத்தப்படுகிறது.

இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோட்டத்தில் கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் வட்டாட்சியர்கள் முன்னிலையில் அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கூட்டத்தில் வருவாய்த்துறை, மின்துறை, நீர்பாசனத்துறை உள்பட 24 துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஆனால் 12 மணி கடந்தும் சுமார் 7 விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். நீண்ட நேரமாகியும் விவசாயிகள் கலந்து கொள்ளாததால் 7 விவசாயிகளுடன் கூட்டம் தொடங்கி அவர்களின் கருத்துக்களும் கோரிக்கைகளும் கேட்கப்பட்டது.

ஆவுடையார்கோயில் பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் நிலத்தடி நீரை எடுக்க அனுமதி இல்லை ஆகவே இதனை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். அதிகமான மக்கள் வந்து செல்லும் கோடியக்கரையை மேம்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கைகள் வைத்தனர். இதற்கு துறை அதிகாரிகள் பதில் அளித்ததுடன் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நிறைவடைந்தது.

விவசாயிகளே இல்லாமல் அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டு நடத்திய விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் பற்றிய தகவல் அறந்தாங்கி கோட்ட விவசாயிகளுக்கு சென்றடையவில்லை என்றும் இனி வரும் காலங்களில் கடமைக்காக இல்லாமல் விவசாயிகளுக்கு முன்னதாக தகவல் கொடுத்து குறைதீர்ப்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.