
கோப்புப்படம்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பைக்கும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகேயுள்ளது காயர் வனப்பகுதி. பாலமா நகர்ப் பகுதியைச் சேர்ந்த ஹரிதாஸ் இவர் தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் காயர் பகுதியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று இரவு 11 மணியளவில் மீண்டும் கேளம்பாக்கம் திரும்பி உள்ளனர். அப்போது எதிரே வந்த காரானது அதிவேகமாக பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஹரிதாஸ் மற்றும் ஹரிதாஸின் மனைவி மற்றும் ஒரு குழந்தை என இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மற்றொரு சிறுவனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் உடலானது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.