Published on 05/09/2023 | Edited on 05/09/2023

தமிழகத்தில் பல இடங்களில் ஏற்கனவே பரவலாக மிதமான மழை பொழிந்து வரும் நிலையில், மேலும் 5 நாட்களுக்கு கனமழை இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை மைய அறிவிப்பின்படி, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் செப்டம்பர் 7, 8, 9 ஆகிய நாட்களில் மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும். கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.