Published on 26/03/2025 | Edited on 26/03/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை இன்னாடு வனச்சரகம் கருவேலம்பாடி வனக்காட்டுபகுதியில் புது குட்டை வன சராகத்தில் வனத்துறைக்குச் சொந்தமான வனநிலத்தில் அருணாச்சலம் என்பவரின் தூண்டுதலின் பேரில் வனக்காடுகளை அழித்து டிராக்டர் டிப்பர்கள் மூலம் மண் அள்ளி செல்வதாக ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த வனவர்கள் மண்ணை எடுத்து சென்ற வாய் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலம், மகேஷ், ராஜேந்திரன், ராஜா ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து ரூ. 60 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், மண்ணை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட ஜேசிபி வாகனத்தையும் இன்னாடு வனச்சரக அலுவலர் சந்தோஷ், மட்டப்பாறை வனவர் அக்னீஸ்வர பறிமுதல் செய்தன.