Skip to main content

ஆயிரம் ஆடுகள்...1700 கோழிகளுடன் புனித செபஸ்தியார் ஆலயத்தில் களைகட்டிய சமபந்தி விருந்து! 

Published on 07/08/2019 | Edited on 07/08/2019

திண்டுக்கல் மாநகரில் உள்ள மலைக்கோட்டைக்கு பின்புறம் அமைந்துள்ளது முத்தழகுபட்டி. இந்த முத்தழகு பட்டியில் பெரும்பான்மையாக கிறிஸ்தவ மக்களே வசித்து வருகிறார்கள். இங்குள்ள புனித செபஸ்தியார் திருத்தலத்தில் வருடந்தோறும் ஆடி மாதம் கடைசியில் மூன்று நாள் திருவிழா நடப்பது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் கடந்த 4- ஆம் தேதி புனித செபஸ்தியார் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

 

DINDIGUL DISTRICT MALAIKKOTTAI  St. Sebastian FESTIVAL The feast of the Samapandi

 

இரண்டாம் நாள் புனித செபஸ்தியார் மின் அலங்காரத்தில் ஊரில் உள்ள முக்கிய வீதிகளில் வலம் வந்தார். அதை தொடர்ந்து மூன்றாம் நாள் செபஸ்தியாருக்கு நேர்த்திக்கடன்  வைத்திருந்த பக்தர்கள் அரிசி, காய்கறிகள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை  காணிக்கையாக  வழங்கினார்கள். இதில் திண்டுக்கல் மாநகரில் கூலி வேலை பார்க்கும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் எல்லாம் முத்தழகுபட்டியை சேர்ந்த  கூலித் தொழிலாளிகள் என்பதால், அவர்கள் வருடந்தோறும் தங்கள் சங்கங்கள் மூலமாக ஆடுகளை காணிக்கையாக செலுத்துவது  வழக்கம்.

 

DINDIGUL DISTRICT MALAIKKOTTAI  St. Sebastian FESTIVAL The feast of the Samapandi

 

 

அதுபோல் இந்த ஆண்டும் பத்துக்கும் மேற்பட்ட சங்கங்கள் மூலமாக ஒரு சங்கத்துக்கு மூன்று, நான்கு ஆடுகள் என நூற்றுக்கணக்கான ஆடுகளை புனித செபஸ்தியாருக்கு காணிக்கை செலுத்த மேல தாளத்துடன் ஊர்வலமாக கொண்டு சென்று, முத்தழகு பட்டியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் காணிக்கையாக செலுத்தினார்கள். அதேபோல் புனித செபஸ்தியாருக்கு வேண்டுதல் காணிக்கையாக ஆடுகள், கோழிகளை பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வந்தனர்.

 

 

DINDIGUL DISTRICT MALAIKKOTTAI  St. Sebastian FESTIVAL The feast of the Samapandi

 

இப்படி புனித செபஸ்தியாருக்கு ஆயிரம் ஆடுகள், 1700 கோழிகள்  காணிக்கையாக பக்தர்கள் கொண்டு வந்தன. ஆடுகள், கோழிகளை ஊரில் உள்ள மக்களும், கோவில் நிர்வாகிகளும் இணைந்து, பக்தர்கள் வழங்கிய ஆடு கோழிகளை கொண்டு அசைவ விருந்து தயார் செய்யும் பணியில் 200- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கறி விருந்தை தயார் செய்தன. அதன் பிறகு சமைத்த சாப்பாட்டை மலைபோல் குவித்தனர்.

DINDIGUL DISTRICT MALAIKKOTTAI  St. Sebastian FESTIVAL The feast of the Samapandi

 

பின்பு தயாரான ஆடு கோழி கறிகளையும்  அண்டா அண்டாவாக வைத்தனர். கறி விருந்தை சாப்பிட பொதுமக்கள் பெரும் திரளாக சாதி மதம் பார்க்காமல், அனைத்து தரப்பினரும் வரிசையில் நின்று விடிய விடிய சாப்பிட்டு வருகிறார்கள். அதோடு புனித செபஸ்தியாருக்கு ஆடு, கோழிகளை காணிக்கையாக செலுத்திய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் டோக்கன் வழங்கும். அதை வைத்து பக்தர்களும், பொதுமக்களும் பாத்திரங்களை கொண்டு வந்து அன்னதானத்தை வீட்டுக்கு வாங்கி செல்கின்றனர். புனித செபஸ்தியார் ஆலய திருவிழா மூலம் திண்டுக்கல் மாநகரம் விழா கோலமாக காட்சி அளிக்கிறது.
 

 

 

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.