
நாமக்கல்லில், 12 வயதே ஆன பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த காம வெறி பிடித்த தந்தையை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
நாமக்கல்லைச் சேர்ந்தவர் காமராஜ் (45). மாட்டுத்தீவன தயாரிப்பு ஆலையில் வேலை செய்து வருகிறார். இவருடைய 12 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த மார்ச் 18 ஆம் தேதி சிறுமியின் தாய் வெளியே சென்றிருந்திருக்கிறார். வீட்டில் சிறுமியும், தந்தை காமராஜும் மட்டும் இருந்துள்ளனர். அப்போது பெற்ற மகள் என்றும் பாராமல் அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மகளை மிரட்டியுள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்த தனது தாயிடம், அந்தச் சிறுமி நடந்த சம்பவம் குறித்து அழுதுகொண்டே கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த தாய் ரேவதி, இதுகுறித்து நாமக்கல் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து காமராஜை கைது செய்தனர். பெற்ற மகள் என்றும் பாராமல், தந்தையே பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.