Skip to main content

போலிஸ் துரத்தியதால் கிணற்றில் விழுந்து இறந்தாரா ? பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 03/07/2019 | Edited on 03/07/2019

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பெரிய கரும்பூர் கிராமத்தில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக இரவு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனைக் காண அக்கிராம மக்கள் மற்றும் சுற்றுப்புறத்தை சேர்ந்த கிராமங்களின் இளைஞர்கள் திரண்டு வந்து பாாத்து கண்டுக்களித்துள்ளனர்.

police


கலைநிகழ்ச்சியின் போது அதே ஊரை சேர்ந்த திருமூர்த்தி என்கிற இளைஞர், குடிபோதையில் மேடையேறி நான் ஆடறதையும் பாருங்க என குத்தாட்டம் ஆடியுள்ளார். இதனை பார்த்து வேறு சில இளைஞர்களும் மேடையேறி ஆட்டம் ஆடியுள்ளனர். இதனால் கலை நிகழ்ச்சி நடந்தயிடத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதுப்பற்றி பாதுகாப்புக்கு வந்த போலிஸாரிடம், கிராம விழாக்குழு வாய்மொழியாக புகார் செய்துள்ளது. போலிஸார் அவர்களிடம் யாரையும் தொந்தரவு செய்யாம நிகழ்ச்சியை ரசிங்க, தூரப்போங்க என்றுள்ளார்கள். அதனை கேட்காமல் போலிஸாரையும் போதையில் தாறுமாறாக பேசியுள்ளனர். கடுப்பான போலிஸார் அவர்களை காவல்நிலையம் போகலாம் என இழுக்க பயந்துப்போய் அங்கிருந்து ஓடியுள்ளனர். போலிஸார் அவர்களை துரத்த இருட்டில் சென்று மறைந்ததால் போலிஸார் விட்டுவிட்டுள்ளனர்.

 

police


இந்நிலையில் நேற்று கரும்பூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான நார் தொழிற்சாலை கிணற்றில் அதேபகுதியை சேர்ந்த ஜெயமூர்த்தி என்பவரின் சடலம் மிதந்துள்ளது. இதனைப்பார்த்து அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கூறியுள்ளனர். தீயணைப்புத்துறையினர் வந்து கிணற்றில் இருந்த சடலத்தை 2 மணி  நேரம் போராடி மேலே கொண்டு வந்தனர். அந்த உடலை உடற்கூராய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இறந்தவரின் உறவினர்கள் கலைநிகழ்ச்சி நடந்தபோது, போலிஸார் துரத்தியதால் போய் கிணற்றில் விழுந்துவிட்டார், அதனால் தான் இறந்துவிட்டார் என பிரச்சனையை கிளப்பியுள்ளனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்