Skip to main content

படிக்காமலேயே தேர்வு எழுதும் 16,000 மாணவர்கள்! பின்னணியில் புத்தக பிரிண்டிங் ஊழல்!

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

பெரியார் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட தொலைதூர கல்வி மைய மாணவர்களுக்கு மே 15-ந் தேதி (இன்னும் இரண்டுநாட்கள்தான் உள்ளன) தேர்வுகள் அறிவிக்கப்பட்டும் இன்னும் புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்ற சர்ச்சை எழும்பியிருக்கிறது. இதற்குப் பின்னணியை ஆராய்ந்தபோதுதான் துணைவேந்தரின் புத்தக பிரிண்டிங் ஊழலும் அம்பலமாகிறது.

 

periyar university

 

இதுகுறித்து, நம்மிடம் பேசும் தொலைதூரக்கல்வி மையங்களின் ஒருங்கிணைப்பார்களோ, “கோவையிலுள்ள பெரியார் பல்கலைக்கழகத்துக்குட்பட்டு  தமிழகத்தில் 200 தொலைதூர கல்விமையங்கள் உள்ளன. வரும் 15ந் தேதி சுமார் 16,000 மாணவர்கள் சேர்ந்து தேர்வு எழுத இருக்கிறார்கள். கல்லூரிகளில் சேர்ந்து படிப்பவர்களுக்கு ஈக்குவலான ஏ.ஓ. முதல் ஐ.ஏ.எஸ்.வரை வேலைவாய்ப்பில்  ஏ டூ செட் முன்னுரிமைகளும் தொலைதூர கல்விமையத்தில் படிப்பவர்களுக்கும் உண்டு. இன்னும் சொல்லப்போனால் 30,000 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் தொலைதூரக் கல்விமையத்தின்மூலம் டிகிரி முடித்துவிட்டால் பட்டதாரி ஆசிரியராகி  45,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாய் சம்பளம் வாங்கக்கூடிய அளவுக்கு பதவி உயர்வு கிடைத்துவிடும். அலுவலக உதவியாளர் இதில் சேர்ந்து டிகிரி முடித்துவிட்டால்  அலுவலகப் பணியாளருக்கான பதவி உயர்வுபெற்றுவிடுவார். போலீஸ் கான்ஸ்டபிளோ எஸ்.ஐ. தேர்வுக்கு தகுதியாகிவிடுவார். குரூப்-1, குரூப்- 2  என துணைக்கலெக்டர், டி.எஸ்.பி. பதவிகளுக்கான தேர்வுகள் மட்டுமல்ல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆவதற்கான யு.பி.எஸ்.சி. தேர்வுகள்கூட எழுதமுடியும். அப்படிப்பட்ட, தொலைதூரக்கல்வி மைய மாணவர்களுக்கு இதுவரை புத்தகங்களே வழங்கவில்லை பெரியார் பல்கலைக்கழகம்” என்றவர்கள் தொலைதூரக் கல்வி மையங்கள் மூலம் பல்கலைக்கழகங்கள் செய்யும் ஊழல்களையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.  
 

“தொலைதூரக் கல்விமையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆகவேண்டும் என்றால் ட்ரஸ்ட் பதிவு செய்து பிரைடு எனப்படும் பெரியார் யுனிவர்சிட்டி டைரக்டரேட் ஆஃப் டிஸ்டன்ஸ் எஜுகேஷன் இயக்குனர் புவனலதாவிடம்  விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கவேண்டும். மையத்தை கண்காணிக்க யுனிவர்சிட்டி இன்ஸ்பெக்‌ஷன் டீம் வரும். ஒருவருக்கு 25,000 ரூபாய் என இரண்டு பேருக்கு 50,000 ரூபாய் கொடுக்க வேண்டும். அப்போதுதான், பல்கலைக்கழகத்திலிருந்து எம்.ஓ.யு. (புரிந்துணைர்வு ஒப்பந்தம்) சைன் பண்ண அழைப்பார்கள். 5 லட்ச ரூபாயிலிருந்து 10 லட்ச ரூபாய்வரை பேரம் நடக்கும். அதில், பேரம் படிந்தபிறகுதான் மையம் நடத்துவதற்கான அனுமதியே கிடைக்கும். அதற்குப்பிறகு, விளம்பரங்கள் கொடுத்து மாணவர்ச் சேர்க்கை நடத்தலாம். டிசம்பர், மே மாதங்களில் தேர்வு நடக்கிறது என்றால் மூன்று மாதங்களுக்கு முன்பே புத்தகங்கள் கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதானே, படித்து தேர்வுக்கு தயாராக முடியும்? ஆனால், புத்தகங்கள் வழங்கப்படாமலேயே 16,000 மாணவர்கள் தேர்வு எழுத இருக்கிறார்கள். காப்பி அடித்துக்கொள்ள ஒரு பேப்பருக்கு 500 ரூபாய் என 5 பாடங்களுக்கு 2,500 ரூபாய் வசூலித்துக்கொள்கிறார்கள். 1 மாணவருக்கு 2,500 ரூபாய் என்றால் சுமார் 16,000 மாணவர்களிடம் 4 கோடி ரூபாயை  வசூலித்துக்கொண்டு காப்பியடிக்க வைத்துவிடுவார்கள். இப்படி, தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் எப்படி தகுதியானவர்களாக இருப்பார்கள்?” என்று கேள்வி எழுப்புகிறவர்களிடம் புத்தகம் வழங்காமல் இருப்பது ஏன்? என்று கேட்டபோதுதான் இதைவிட கோடிக்கணக்கில் நடக்கும் ஊழலை வெளிப்படுத்துகிறார்கள்.

 

periyar university


 

“பெரியார் பல்கலைக்கழகத்தின் முந்தைய துணைவேந்தர் ஓய்வுபெற்றபோது உயர்கல்வித்துறைச் செயலாளர் சுனில்பாலிவால் கன்வீனராக இருந்தார். அப்போது, பல்கலைக்கழங்களில் தனியார் பிரிண்டர்களிடம்  கோடிக்கணக்கில் கமிஷன் வாங்கிக்கொண்டு துணைவேந்தர்கள் அண்ட் கோவினர் ஊழல் செய்வதை கருத்தில் கொண்டு, ‘இனி, தொலைதூர கல்வி மையங்களுக்கான புத்தகங்களை பல்கலைக்கழகங்கள் பிரிண்டிங் செய்வதற்கான ஆர்டரை தமிழக அரசு அச்சகத்தில்தான் கொடுக்கவேண்டும்’ என்று அரசாணை வெளியிட்டார். இதனால், புதிதாக வந்த துணைவேந்தர் குழந்தைவேலு அரசு அச்சகத்தில் ஆர்டர் கொடுத்தால்  கமிஷன் கிடைக்காது என்பதால் ஆர்டர் கொடுக்காமல் இருக்கிறார். ஆனால், ஒருசில பல்கலைக்கழக துணைவேந்தர்களோ  அரசாணையை மதிக்காமல் தனியார் அச்சகங்களில் புத்தகங்களை பிரிண்டிங் கொடுத்துவிட்டு கோடிக்கணக்கில் கமிஷன்களை வாங்கிக்கொண்டு ஊழலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். துணைவேந்தர்களின் சுயநலத்தால் புத்தகங்கள் வழங்காமல் எதிர்கால அரசு அதிகாரிகளின் தரத்தையே பாழாக்கிக்கொண்டிருக்கிறார்கள். மேலும், கடந்த 26ந் தேதிக்குள் தேர்வுக்கட்டணம் செலுத்தவேண்டும் என்று 23ந் தேதி அறிவித்திருக்கிறார்கள். சர்வர் ஒர்க் ஆகாதாதால் பல மாணவர்கள் தேர்வுக்கட்டணம் செலுத்தமுடியாமல் தேர்வு எழுதமுடியாமலும் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.  மே-15ந் தேதி நடத்தப்படும் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட வேண்டும். புத்தகங்கள் வழங்கியபிறகே  தேர்வுகள் வைக்கப்படவேண்டும். இல்லையென்றால், தேர்வானது முறையான தேர்வாக இருக்காது” என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.
 

இதுகுறித்து, பெரியார் யுனிவர்சிட்டி டைரக்டரேட் ஆஃப் டிஸ்டன்ஸ் எஜுகேஷன் இயக்குனர் புவனலதாவை தொடர்புகொண்டபோது ஸ்விட்ச் ஆஃப் அண்ட் நாட் ரீச்சபிள் நிலையிலேயே உள்ளது.
 

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேலுவிடம் கேட்டபோது, விளக்கம் கொடுக்க மறுத்துவிட்டார்.
 

புத்தகங்கள் இல்லாமலேயே தேர்வுக்கு படித்து எப்படி தேர்ச்சி பெறமுடியும்? அப்படி தேர்ச்சிபெற்றவர் அரசுப்பணியில் எப்படி நேர்மையுடன் செயல்படுவார்?

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெரியார் பல்கலை. பதிவாளர் விவகாரம்; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Periyar University Registrar Matters The High Court questions

'பியூட்டர் பவுண்டேஷன்' என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருக்கக்கூடிய ஜெகநாதன் மற்றும் பதிவாளர் பொறுப்பு வகித்த தங்கவேல், இணை பேராசிரியராகப் பணியாற்றி வந்த சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த ராம் கணேஷ் ஆகியோர் கல்விக் கட்டணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரில் சேலம் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த ஜெகநாதன் மீண்டும் துணை வேந்தராகப் பணியாற்றி வருகிறார்.

அதே சமயம் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்குத் தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பாடத் திட்டங்களில் பெரும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் தணிக்கைக் குழு ஆய்வு செய்திருந்தது. இந்த ஆய்வில் முறைகேட்டில் தங்கவேல் ஈடுபட்டது நிரூபணமானது.

அதன்பின்னர் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தமிழக அரசு கடந்த 7 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பழனிசாமி குழு அறிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக் பிறப்பித்திருந்தார். இருப்பினும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்யாமல் இருந்து வந்தார். இதற்கு ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து பதிவாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கணினி அறிவியல் துறை தலைவராக உள்ளார். அதே சமயம் தங்கவேல் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கேட்டு துணைவேந்தர் ஜெகநாதன் உயர்கல்வித் துறைக்கு கடிதம் எழுதி இருந்தார். இது தொடர்பாக தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக், துணை வேந்தருக்கு மீண்டும் எழுதியிருந்த கடிதத்தில், “பதிவாளராக இருந்த தங்கவேலு மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தங்கவேல் மீது 8 புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Periyar University Registrar Matters The High Court questions

இதற்கிடையே பணிநீக்கம் தொடர்பான உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவாளராக இருந்த தங்கவேல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று (28.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தங்கவேல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், “பல்கலைக்கழகம் என்பது தனிச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இதில் சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் உள்ளனர். மனுதாரர் 34 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர். நாளை ஓய்வு பெற உள்ள நிலையில் பணிநீக்கம் செய்வது தொடர்பான பரிந்துரை தங்கவேலுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே பணிநீக்கம் தொடர்பான பரிந்துரைக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி இளந்திரையன், “உயர் கல்வித்துறை செயலாளரின் பரிந்துரை குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது” எனக் கேள்வி எழுப்பினார்.

Periyar University Registrar Matters The High Court questions

இதற்குப் பதிலளித்த தற்போதைய பதிவாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரகுமார், “பணி நீக்கம் குறித்து பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும். இது தொடரான பரிந்துரை சிண்டிகேட் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “நிதி முறைகேடு புகார் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். உயர் கல்வித்துறை செயலாளரின் பரிந்துரை மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் துணைவேந்தர் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டது ஏன்? முறைகேடு புகார் தொடர்பாக சேலம் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மீது துணைவேந்தர் உரிய நடவடிக்கை எடுக்கலாம். மார்ச் 14 ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்தார். பதிவாளராக இருந்த தங்கவேல் நாளையுடன் (29.02.2024) பணி ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

பெரியார் பல்கலை. பதிவாளர் விவகாரம்; உயர் கல்வித்துறை அதிரடி உத்தரவு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Periyar University. Registrar Matters; Higher Education Action Order

'பியூட்டர் பவுண்டேஷன்' என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருக்கக்கூடிய ஜெகநாதன் மற்றும் பதிவாளர் பொறுப்பு வகித்த தங்கவேல், இணை பேராசிரியராகப் பணியாற்றி வந்த சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த ராம் கணேஷ் ஆகியோர் கல்விக் கட்டணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரில் சேலம் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த ஜெகநாதன் மீண்டும் துணை வேந்தராகப் பணியாற்றி வருகிறார்.

அதே சமயம் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்குத் தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பாடத் திட்டங்களில் பெரும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் தணிக்கைக் குழு ஆய்வு செய்திருந்தது. இந்த ஆய்வில் முறைகேட்டில் தங்கவேல் ஈடுபட்டது நிரூபணமானது.

அதன்பின்னர் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தமிழக அரசு கடந்த 7 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பழனிசாமி குழு அறிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக் பிறப்பித்திருந்தார். இருப்பினும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்யாமல் இருந்து வந்தார். இதற்கு ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

Periyar University Registrar Matters Higher Education Action Order

இதனையடுத்து பதிவாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கணினி அறிவியல் துறை தலைவராக உள்ளார். அதே சமயம் தங்கவேல் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கேட்டு துணைவேந்தர் ஜெகநாதன் உயர்கல்வித் துறைக்கு கடிதம் எழுதி இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக், துணை வேந்தருக்கு மீண்டும் எழுதியுள்ள கடிதத்தில், “பதிவாளராக இருந்த தங்கவேலு மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தங்கவேல் மீது 8 புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 29 ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருக்கும் நிலையில், தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.