Skip to main content

என்ன எச்.ராஜா? -எஸ்.எஸ்.சிவசங்கரின் கண்டன அறிக்கை!!

Published on 16/12/2018 | Edited on 16/12/2018

 

தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களையும், சர்ச்சைக்குரிய ட்விட்களையும் வெளியிட்டு வரும் பாஜக தேசிய செயலாளர்களில் ஒருவரான எச்.ராஜா தற்பொழுது மறைமுகமாக கலைஞர் சிலை திறப்பு விழாவை சாடும் வகையில் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ் எஸ் சிவசங்கர் தனது கண்டன அறிக்கையில் ,

 

"உயிரற்ற படேலுக்கு சிலையா என்று நேற்று கேள்வி எழுப்பினார்கள் நாளை?", இந்த அறிவார்ந்த கேள்வியை பா.ஜ.கவின் தேசிய செயலாளர் எச்.ராஜா ட்விட் செய்துள்ளார்.

 

நாளை தலைவர் கலைஞருக்கு சிலை திறக்கும் கொண்டாட்டத்தில் தி.மு.க தோழர்கள் இருப்பதை பார்த்த வயிற்றெரிச்சலில் இப்படி வாந்தி எடுத்திருக்கிறார். 

 

sss

 

படேல் சிலை நிறுவப்பட்டதற்கும், கலைஞர் சிலை நிறுவப்படுவதற்குமான வித்தியாசத்தை தி.மு.கவின் தொண்டர்கள் அதே ராஜாவின் பதிவில் பதில் இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 

படேல் சிலை மத்திய அரசு, மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு நிறுவியது. தலைவர் கலைஞர் சிலை திராவிட முன்னேற்றக் கழக செலவில் நிறுவப்பட்டுள்ளது.

 

மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்த பிரதமரை கேள்வி கேட்க சாதாரண குடிமகனுக்கும் உரிமை உண்டு. அந்த அடிப்படையில் தான், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் கவிஞர் கனிமொழி கேள்வி எழுப்பினார்.

 

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு இழப்பீடு வழங்க மோடி அரசுக்கு மனமில்லாமல் போனது தான் பட்டேல் சிலை செலவீனம் குறித்த விமர்சனத்தை கிளப்பியது. இது கவிஞர் அவர்களின் கேள்வி மாத்திரம் அல்ல. தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனின் உள்ளக் குமுறலும் கூட.

 

இந்த புரிதல் கூட இல்லாமல் எச்.ராஜா கேள்வி கேட்பதாக சிலர் நினைக்கலாம். புரிந்தே கேட்பது தான் ராஜாவின் பாணி. திசை திருப்பலுக்காக அவ்வப்போது இது போன்று முட்டாள்தனமாக பிதற்றுவது எச்.ராஜாவின் வேலை.

 

சில நாளிதழ்கள் இது போன்ற வேலைகளை செய்து வருகிறார்கள். அதில் பலரும் ஏமாறுவது உண்டு, அவர்கள் நடுநிலையாளர்கள் என்று நினைத்து. 

 

ஆனால் எச்.ராஜா சமீபகாலமாக இது போன்ற வேலைகளை செய்வதை சின்னக் குழந்தையும் அறியும். 

 

அதைத் தான் மதன்கார்க்கியும், சிம்பும் "பெரியார் குத்து" பாடலில் வெளிப்படுத்தி இருக்கிறாரநிலைமை 

"கிழவன் சிலைய உடைக்கும்

கழுத என்ன செஞ்சு கிழிக்கும்

அந்த பழைய நெருப்ப திருப்பி

கிளப்பி குழம்பி நின்னு முழிக்கும்"

 

ஏற்கனவே தந்தை பெரியார் சிலையை உடைக்க கிளம்பி ராஜா மூக்குடைப்பட்டதை தான் சொல்கிறார்கள். 'கழத' என்ற அன்பான அழைப்பு.

 

பாடலின் இறுதியில் தான் செம அடி.

 

"உண்மையான நாயி

அது நன்றியோட கிடக்கும்

அட வேஷம் போட்டு வந்த நாயி

மானங்கெட்டு குலைக்கும்"

 

சரியா தான் சொல்லியிருக்காங்க, வேஷம் போட்டு வந்த நாயி மானம் கெட்டு குலைக்கும். சிறப்பு.

 

இது யாருக்கானது என்று புரியாமல் போய் விடக் கூடாது என்று தான், கடைசியாக சிம்பு 'சொல்லி' அடிக்கிறார்.

 

"என்ன ராசா"

 

மிஸ்டர் எச்.ராஜா அவர்களே எங்கள் தலைவர் தளபதி அவர்களை டேக் செய்து ட்விட் செய்திருக்கிறீர்களே, அங்கே தம்பி சிம்பு நேராகவே 'பாடிவிட்டார்'. 

 

வரி கொடுத்த சனங்க, எங்க பணத்தில் படேல் சிலை வச்சிருக்கிறீயேன்னு கேட்டா, தி.மு.க காசுல, நாங்க எங்க தலைவருக்கு சிலை வைக்கிறத்துக்கு கேள்வி கேட்கிறீங்க.

 

அய்யா வெற்றிகொண்டான் மாதிரி கேள்வி கேட்டுடுவேன். ஆனா உங்க நிலைமை ரொம்ப மோசமாயிடும்.

 

எங்கள் தலைவரை நாங்கள் நேசிக்கிறோம். மறைந்தாலும் எங்கள் நெஞ்சம் எல்லாம் நிறைந்திருக்கிறார். அதனால் கொண்டாடுகிறோம். "சொந்த காசில்", சிலை வைக்கிறோம். 

 

கிராமத்தில் சொல்வதை நினைவூட்டுகிறேன்.

 

"கொடுத்து வச்ச மகராசி வயிற்றில் சுமக்கிறா. உன் வயிற்றில வளருல்லன்னா, ஏன் அம்மி குழவிய எடுத்துக் குத்திக்கிற?"

 

அதையே தான் கேட்கிறேன்.

 

# என்ன எச்.ராசா ?

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்