காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், ’’இந்தியாவின் பன்முக தன்மையை சிதைத்து ஒரே நாடு ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என்ற ஒருமை படுத்துகின்ற ஏகாதிபத்திய திமிரோடு மத்திய அரசு முனைந்திருப்பதால் அதை எதிர்த்து போராட வேண்டிய கடமை திராவிட கட்சிகளுக்கு உள்ளதால் நான் தி.மு.க.வோடு கரம் கோர்த்திருக்கிறேன்.
காவேரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் நம் தலையில் கல்லை போடுகின்றது. இதற்கு பின்னணியில் மோடி அரசு இருக்கின்றது. கலாச்சார படை எடுப்புகளை , திராவிடர் கட்சிகளின் மீது கல் வீசலாம் என்று நினைக்கிற எண்ணம் கொண்டவர்களின் நோக்கத்தை கிள்ளி எரிகின்ற உறுதியை அண்ணா பிறந்த வீட்டில் சபதம் ஏற்று கொண்டேன்’’ என கூறினார்.
- அரவிந்த்