Skip to main content

மாணவர்கள் கண்டுபிடித்த செயற்கைகோள்....

Published on 23/09/2019 | Edited on 23/09/2019

இந்த நவீன யுகத்தில் புதிய புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு,  வந்து கொண்டே இருக்கிறன. 

 

erode students invent small size satellite

 

 

அந்த வகையில் இன்று ஈரோடு மாணவர்கள் தாங்கள் கண்டுபிடித்த செயற்கைகோளை கலெக்டர் கதிரவனிடம் அவரது அலுவலகத்தில் வந்து இன்று செய்து காட்டினார்கள். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர். அப்போது ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த  பிளஸ்-2  மாணவர்கள்  ஸ்ரீநிதி,  நவநீதன் ஆகியோர் தாங்கள் கண்டுபிடித்த உலகிலேயே மிகச் சிறிய செயற்கைகோளை கொண்டு வந்து கலெக்டர் கதிரவனிடம் காட்டினர்.  அது எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து அவரிடம் விளக்கினர்.

இது குறித்து மாணவர்கள் ஸ்ரீநிதி நவநீதன் கூறும்போது,  நாங்கள் கண்டுபிடித்த செயற்கைக்கோள் உலகிலேயே மிகச் சிறிய செயற்கை கோள் ஆகும்.  இதன் எடை 18 கிராம் ,உயரம் 3 சென்டிமீட்டர் அளவு உள்ளது.  இந்த செயற்கைக்கோளுக்கு ஸ்ரீ சாட்  என்று பெயரிட்டுள்ளோம். இந்த செயற்கைக்கோளை வைத்து நாம்  கடல் மட்ட உயரம்,   வெப்பநிலை,   காற்றழுத்தம் ஆகியவற்றை  நமது செல்போன் மூலம் காண முடியும். இதற்கு செலவும் மிக குறைவு. வேளாண்மை துறைக்கு இது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்றனர்.

மாவட்ட ஆட்சியர் கதிரவன் மாணவர்களை பாராட்டி உற்சாகப்படுத்தினார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தொடர்ந்து ஆடு திருடும் கும்பலால் விவசாயிகள் அச்சம்

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
 Farmers are afraid of gangs who keep stealing goats

ஈரோட்டில் தொடர்ந்து ஆடு திருடும் கும்பலால் விவசாயிகள் அச்சமடைந்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்துள்ள கரியாக்கவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (52). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 22 ஆம் தேதி மாலையில் பட்டியில் ஆடுகளை அடைத்து  வைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். அதன் பின்னர் நேற்று முன்தினம் காலை பட்டியில் வந்து பார்த்தபோது அதிலிருந்த 3 ஆடுகள் மாயமாகி இருந்தன. விசாரணையில் மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.

அதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த வடிவில் (66) என்பவரது பட்டியில் இருந்த மூன்று ஆடுகளும் திருட்டுப் போயிருந்தது. அடுத்தடுத்து இரண்டு பட்டியில் ஆடுகள் திருட்டுப் போன சம்பவம் அப்பகுதி விவசாயிகளுடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருட்டுப் போன ஆடுகளின் மதிப்பு ரூ.80 ஆயிரம் இருக்கும். இது குறித்து மொடக்குறிச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மொடக்குறிச்சி பகுதியில் தொடர்ந்து கால்நடைகள் திருட்டுப் போய் வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

விலங்குகளைச் சிதைக்கும் அவுட்டுக் காய்; 2 பேர் கைது

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Out Kai, which destroys animals; 2 arrested

சத்தியமங்கலம் அருகே வன விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த 10 (வெடிக்கும்) அவுட்டுக் காய்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையில் போலீசார் புளியங் கோம்பை, காசிக்காடு, வடக்கு பேட்டை ஆகிய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் கம்பத்ராயன் புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக இரண்டு பேர் சென்று கொண்டிருந்தனர். போலீசை பார்த்ததும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் மற்றும் திருமான்(60) எனத் தெரிய வந்தது. மேலும் அவர்கள் இருவரும் வனவிலங்குகளை வேட்டையாட அவுட்டுக் காய்களைப் பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் திருமான் வீட்டின் பின்பகுதியில் உள்ள முட்புதரில் பத்து அவுட்டுக்காய்கள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில், திருமான் இருவரையும் கைது செய்தனர். மேலும் 10 அவுட்டுக் காய்களையும் பறிமுதல் செய்தனர்.