ஈரோட்டைச் சேர்ந்தவர் பிரகாஷ் இவரது தம்பி கார்த்தி. இவர்களின் பெரியப்பா மகன் ஆ.செந்தில்குமார் இவர்களுக்கு பூர்வீக சொத்து ஈரோடு பிருந்தா வீதியில் உள்ளது. பிரகாஷிக்கும் ஆ.செந்தில்குமாருக்கும் சொத்து பிரச்சனை உள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 8 கோடி மதிப்புள்ள சொத்தை செந்தில்குமாரே அபகரித்து வைத்துள்ளதாக அவரது சித்தப்பா மகனான பிரகாஷ் தனது மனைவி, தாயார், குழந்தை தம்பி, அவரது மனைவி என 6 பேருடன் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வந்து திடீரென தீக்குளிக்க முயன்றனர். இச்சம்பவத்தை தடுத்த போலீசார் பிரகாஷ் மற்றும் கார்த்தி ஆகிய இருவரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இவர்கள் புகார் கூறிய ஆ.செந்தில்குமார் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க துணைச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.