
சென்னை எண்ணூரில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணியின் போது வட மாநிலத்தவர்கள் இருவர் மண்ணில் சிக்கிக் கொண்ட நிலையில் இருவரும் 2 மணி நேர போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சென்னை எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பல வடமாநில இளைஞர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று திடீரென பணியிடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் இரண்டு வடமாநில இளைஞர்கள் சிக்கிக்கொண்டனர். உடனடியாக அப்பகுதி மக்கள் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த எண்ணூர் மீட்புப் படையினர் மற்றும் போலீசார் ஜேசிபி இயந்திரம் மூலம் மண்ணில் புதைந்த இரண்டு இளைஞர்களையும் இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர். பின்னர் இருவரும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.