Skip to main content

புத்தகத்தைக் கொடுக்கச் சென்ற மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; தலைமறைவான இளைஞர் 

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

cuddalore srimushnam nearest village school student incident 

 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் பொறியாளர் பட்டம் படித்த இளைஞர் பாலகுமார் (வயது 25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயதுடைய மாணவியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு மாணவியிடம் படிப்பதற்கு புத்தகம் தருமாறு கேட்டுள்ளார். மாணவி புத்தகத்தை தேடிப் பார்த்து எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது பொறியாளர் பாலகுமார், புத்தகத்தை தேடி எடுத்துக் கொண்டு வந்து தனது வீட்டில் கொடுத்துவிட்டு வருமாறு கூறியுள்ளார்.

 

இதனை நம்பிய மாணவி சிறிது நேரத்தில் புத்தகத்தை தேடி எடுத்துக்கொண்டு கொடுப்பதற்காக பாலகுமார் வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த பொறியாளர் பாலகுமார், மாணவி அவரது வீட்டுக்குள் சென்றதும் வீட்டுக் கதவை சாத்தி உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கத்தி கூச்சலிட்டுள்ளார் மாணவியின் குரல் வெளியே கேட்பதற்குள் பாலகுமார் திடீரென்று மாணவியின் கழுத்தில் அணிந்திருந்த துப்பட்டாவால் அவரது கையைக் கட்டி வாயைப் பொத்தி வீட்டுக்குள்ளே வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 

மாணவி, பொறியாளரின் கொடுமை தாங்க முடியாமல் கத்தி கூச்சல் போட முயல, அப்போது பாலகுமார் மாணவியின் கன்னத்தில் அறைந்துள்ளார். பிறகு மாணவியின் கட்டை அவிழ்த்து விட்டதும் அழுகையும் ஆத்திரமுமாக வீட்டுக்கு ஓடி வந்த மாணவி, நடந்த சம்பவம் குறித்து தனது பாட்டியிடம் கூறி கதறி அழுதுள்ளார். உடனே அந்த பாட்டி மாணவியை அழைத்துக்கொண்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்து  சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ததோடு போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

உடனடியாக சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. உடனே மாணவி அளித்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்து பொறியாளர் பாலகுமாரை தேடி வருகிறார்கள். பத்தாம் வகுப்பு மாணவியை துப்பட்டாவால் கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்த பொறியாளரின் செயல் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.