Skip to main content

ராணிப்பேட்டையில் 2500 பேர் சிகிச்சை பெற புதிய மருத்துவமனைகள்!

Published on 08/04/2020 | Edited on 08/04/2020

ராணிப்பேட்டை மாவட்டத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்காடு அடுத்த  மேல்விசாரத்தில் அமைந்துள்ள அப்துல் அக்கீம் தனியார் பொறியியல் கல்லூரியை தற்காலிக மருத்துவமனை வளாகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

corona virus



அது தொடர்பாக அக்கல்லூரி கட்டிடங்களை ஆய்வு செய்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, 300 படுக்கையில் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையாக அங்குள்ள அறைகளை தயார் செய்ய சுகாதாரத் துறை, பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் சுமார் 2500 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட அறைகளை பள்ளி, கல்லூரி, தனியார் அமைப்புகள் தந்த இடங்களில் அங்காங்கே அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இம்மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 என்பது குறிப்பிடதக்கது.


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆந்திர முதல்வரின் அறிவிப்பு; தமிழகத்தில் எதிர்ப்பு

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
Objection to Andhra barrage will be constructed at Palaru

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகள் மற்றும் புகார் உட்பட பல்வேறு கோரிக்கைகளைத் தெரிவித்து அதற்கான விளக்கங்களையும் கேட்டறிந்தனர்.

முன்னதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் எனத் தெரிவித்திருக்கும் சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாக விவசாயிகள் எழுந்து நின்றபடி தங்களது கண்டனங்களைத் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் தடுப்பணைக் கட்டும் செயலை ஆந்திர அரசு கைவிட வேண்டும் எனவும் இதற்குத் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து விவசாய குறைதீர்வு கூட்டத்தை முடித்து விட்டு வெளியே வந்த விவசாயிகள், ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையாக ஆந்திர மாநில முதல்வர் பாலாற்றில் தடுப்பணைக் கட்டும் ஏற்பாடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்தும் இதனை மாவட்ட ஆட்சியர் தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு சேர்க்க வேண்டுமெனவும் வேண்டுகோள் வைத்துள்ளனர். மேலும் தடுப்பணைக் கட்டப்படும் எனில் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களை ஒன்றிணைத்து  போராட்டம் நடத்தவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்

Next Story

120 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்த எஸ்.பி.

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Sp recovered 120 stolen cell phones and handed them over to their owners.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தவறவிட்ட செல்போன்கள் குறித்து காவல் நிலையங்களில் வழக்குகள் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொண்டு ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த 120 செல்போன்கள் காவல்துறை அதிகாரிகள் மூலமாக மீட்கப்பட்டது. மேலும் மீட்கப்பட்ட செல்போன்கள் அனைத்தும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் நடைபெற்று. அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது..

மேலும் நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் செல்போன் தவறவிட்டாலோ, அல்லது திருடப்பட்டாலோ அது குறித்து உடனடியாக பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் சென்று புகார் அளிக்க முன் வர வேண்டும். அதேபோல் கடந்த மாதம் மட்டும் வாலாஜாபேட்டையில் செல்போன் தவறவிட்ட வழக்கில் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான 30 செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என இந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.