Published on 30/01/2022 | Edited on 30/01/2022

தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 22,238 ஆக பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கை 24,658 ஆக பதிவான நிலையில் இன்றைய ஒருநாள் பாதிப்பு சற்று குறைவாகும். இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,36,952 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 3,998 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 37,544 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 30 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2,03,926 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 26,624 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 30,84,470 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர்.