Skip to main content

கரோனா தடுப்புப் பணி - நாளை திருப்பூர், நீலகிரியில் முதல்வர் ஆய்வு!

Published on 05/11/2020 | Edited on 05/11/2020

 

fg

 

கரோனா வைரஸ் பாதிப்பு நடவடிக்கை குறித்து நாளை (06-11-2020) திருப்பூர், நீலகிரியில் முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்ய உள்ளார்.

 

இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவிக்கொண்டுள்ளது. அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள் எனக் கரோனா தொற்று, அடுத்த கட்ட பாய்ச்சல் எடுத்து வருகின்றது. தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், கரோனா தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அவர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கரூர், நாமக்கல் மாவட்டங்களிலும் கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆய்வு நடத்தினார். இந்நிலையில், நாளை திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தவுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்