Skip to main content

சிமெண்ட், இரும்பு விலை உயர்வை கண்டித்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம்!!

Published on 12/02/2021 | Edited on 12/02/2021

 

Civil Engineers Association struggle against rising cement and steel prices

 

சிமெண்ட் மற்றும் இரும்பு விலை உயர்வைக் கண்டித்து நாளை (13.02.2021) இந்தியா முழுவதும் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில், ஒருநாள் அடையாள வேலை நிறுத்தமும், தர்ணா போராட்டமும் நடைபெற உள்ளதாக இந்திய கட்டுமான பொறியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

 

இந்த வேலை நிறுத்தமும் அடையாள தர்ணா போராட்டமும் குறித்து திருச்சியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில், கரோனா காலத்திற்குப் பிறகு கட்டுமானப் பொருட்களில் மிக முக்கியமான இரும்பு மற்றும் சிமெண்டின் விலை அளவுக்கு அதிகமாக உயர்ந்துள்ளதாகவும், அதில் இரும்பின் விலை 40 சதவீதமும், சிமெண்டின் விலை 30 சதவீதமும் உயர்ந்துள்ளது. கிலோ 47 ரூபாய்க்கு விற்ற இரும்பு, இன்று 65 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. ஒரு மூட்டை சிமெண்ட் விலை 350 ஆக இருந்தது, இன்று 450 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது எனவே கட்டுமான தொழில் மிகவும் நலிவடைய ஆரம்பித்திருக்கும் நிலையில், இந்த விலையேற்றத்தை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கட்டுமானப் பணிகளை வளர்வதற்கு உதவிட வேண்டும் என்பதை வலியுறுத்தினர். 

 

இந்தியா முழுவதும் சுமார் 47 மையங்களில் இந்தக் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த 47 மையங்களிலும் நாளை அந்தந்த மாநிலங்களில் ஒருநாள் கட்டுமான வேலைகளை நிறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். திருச்சியில் மட்டும் சுமார் 800 உறுப்பினர்களைக் கொண்டிருக்கக்கூடிய இந்தக் கட்டுமானப் பொறியாளர் சங்கத்தின் உறுப்பினர்கள், நாளை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களுடைய தர்ணா போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.