Skip to main content

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- துணை நடிகர் உள்ளிட்ட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு! 

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

children incident madurai pocso court order

 

திரைப்பட துணை நடிகர் நாச்சியப்பன் உள்ளிட்ட இருவருக்கு பாலியல் குற்றம் தொடர்பான வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

 

மதுரை மாவட்டம், சோழவந்தானைச் சேர்ந்த துணை நடிகரான பக்தன் என்கிற நாச்சியப்பன் என்பவர், கடந்த 2017- ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனைப் பார்த்த மணிகண்டன் என்பவரும் அதே சிறுமிக்கு பாலியல் சொந்தரவுக் கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக, கிடைத்த புகாரின் அடிப்படையில் இருவர் மீது சோழவந்தான் காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

 

மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததாலும், இருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

 

இதில், துணை நடிகரான நாச்சியப்பன் எலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான அரசாணை வெளியீடு

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

govt order passed kalaignar Women Entitlement Scheme

 

மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்துவது குறித்து ஒரு சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடனான கூட்டம் நடைபெற்றது . அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' எனப் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும். வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

 

இதையடுத்து இந்தத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்பது எப்படி? யார் யாருக்கு இந்த உரிமைத் தொகை கொடுக்கப்படும் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' தொடர்பான விண்ணப்பப் படிவத்தைத் தமிழக அரசு வெளியிட்டது. அந்தப் படிவத்தில் பல்வேறு கேள்விகள் இடம் பெற்றுள்ளன. 18 வயதுக்கு மேல் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. மேலும் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் சரிபார்க்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மேலும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டது. இந்த வழிகாட்டு நெறிமுறையானது அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வரும் 24 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 36 ஆயிரம் ரேசன் கடைகளில் விண்ணப்பங்களைப் பெறும் முகாம் நடத்தப்படும். இதில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் தன்னார்வலர்களைக் கொண்டு மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் பெறப்பட உள்ளது. வருவாய்த்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்களும் இந்தத் திட்டத்தில் பணியாற்ற உள்ளனர். முன்னதாக இந்தத் திட்டத்திற்கான சிறப்பு அலுவலராக இளம்பகவத் நியமனம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் குறித்த 35 பக்கம் கொண்ட அரசாணை வெளியாகி இருக்கிறது. அதில் திட்டத்தின் நோக்கம், விண்ணப்பிக்கும் நடைமுறைகள், குடும்பத்தலைவி வரையறை, பொருளாதாரத் தகுதிகள், இந்தத் திட்டத்தில் பயன்பெறத் தகுதி இல்லாதவர்கள், செயல்படுத்தும் துறைகள், மாநில கண்காணிப்புக்குழு, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விரிவான தகவல்கள் இந்த அரசாணையில் இடம்பெற்றுள்ளன. 

 

 

Next Story

சட்டம் ஒழுங்கு குறித்து ஜூலை 11ல் முதல்வர் ஆலோசனை

Published on 09/07/2023 | Edited on 09/07/2023

 

law and order issue cm mk stalin discussion

 

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை தொடர்பாக நாளை மறுநாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

 

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10 வது தளத்தில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் (ஜூலை 12) நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டம் காலை 11.30 மணிக்கு தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை, தமிழகத்தில் தற்போதைய சட்ட ஒழுங்கு  நிலவரம் குறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜீவால், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா, ஏடிஜிபி, ஐஜி, டிஐஜி, அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். சங்கர் ஜீவால் டிஜிபியாக பதவி ஏற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.