Published on 31/05/2022 | Edited on 31/05/2022

டெல்டா பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.
டெல்டா பாசனப்பகுதிகளில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4,965 கிமீ தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், நாகை மாவட்டம் கருவேலங்கடையில் உள்ள கல்லாறு வாய்க்கால் பகுதியில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அந்தப் பகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை செல்லும் முதல்வர் அங்கு நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளையும் ஆய்வு செய்ய உள்ளார்.