Published on 11/06/2022 | Edited on 11/06/2022

திருவொற்றியூர் 5வது வட்டம், திருநகரில் வசித்து வருபவர் ஜான் ஜோசப் என்கின்ற ஓவியர். இவர், ஒரு கட்டையின் இரு முனைகளிலும் இரண்டு பென்சில்களை வைத்து ஒரு முனையில் தமிழக முதல்வரின் உருவத்தையும், மறுமுனையில் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் உருவத்தையும் ஒரே நேரத்தில் வரைந்து அசத்தியுள்ளார். இந்நிலையில் ஓவியர் ஜான்ஜோசப், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கரைச் சந்தித்து அவர் வரைந்த படத்தை வழங்கினார். மேலும், எம்.எல்.ஏ. கே.பி. சங்கரின் ஓவியத்தையும் நினைவு பரிசாக வழங்கினார்.