Skip to main content

சினிமா பாணியில் திருச்சி விமான நிலைய பயணிகளை சுற்றி வளைத்த சி.பி.ஐ..!

Published on 06/08/2018 | Edited on 06/08/2018
aiport


திருச்சி விமான நிலைத்தில் அதிரடியாக சி.பி.ஐ. உள்ளே நுழைந்தது விமான நிலைய அதிகாரிகள் இடையே பெரிய பதட்டத்தையே ஏற்படுத்தியது. கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இதே போல அதிரடி சோதனை நடத்திய சி.பி.ஐ. தங்கம் கடத்தல் விவகராத்தில் பயணிகளிடம் சோதனை செய்வதில் மெத்தனமாக இருந்தாக இரண்டு சுங்க அதிகாரிகளை கைது செய்து அதிர்ச்சியடைய வைத்தனர்.

திருச்சி விமானத்தில் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய 3 இடங்களில் இருந்து வரும் விமானத்தில் மட்டும் அதிக அளவில் தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் கடத்தப்பட்டு வந்தன. பயணிகளிடம் தங்கத்தை பறிமுதல் செய்ததும் இதற்கு பின்புலம் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் பயணிகள் எல்லோரும் எங்களுக்கு எதுவும் தெரியாது நாங்கள் குருவிகள் தான் என்கிற ரீதியிலே சொல்லி வருகின்றனர்.

கடந்த 6 நாட்களுக்கு முன்பு மலிண்டோ விமானத்தில் 6,300 கிலோ தங்க கட்டிகள் கடத்தியதும் அதற்கு விமான பணியாளர்களே உடந்தை என்று விசாரணையில் தெரிய வந்தது. தனியார் ஏஜென்சி ஊழியர்கள், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனையில் கைது செய்தனர். இது குறித்து நாம் ஏற்கனவே எழுதியிருந்தோம். இது சுங்க அதிகாரிகளுக்கு பெரிய அதிர்ச்சியையும் அசிங்கத்தையும் ஏற்படுத்தியது.

 

 

இந்த நிலையில் தான் சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து இறங்கியது. வெளியே மதுரை சி.பி.ஐ.டி.எஸ்.பி மதுசூதனன் தலைமையில் 3 இன்ஸ் உள்ளிட்ட 13 போர் திடீர் என உள்ளே புகுந்து பயணிகளின் லக்கேஜ், மற்றும் 70 பயணிகள், சுங்க அலுவலகம் ஆகியவற்றை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அனைவரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

சுங்க அதிகாரிகள் வெங்கடாசலம், சைலாஸ்மூர்த்தி, அனிஸ்பாத்திமா உள்ளிட்ட மூன்று அதிகாரிகளை விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் நேற்று இரவு மலேசியாவிலிருந்து திருச்சிக்கு வரவேண்டிய ஏர் ஏசியா விமானம் இன்று காலை திருச்சி வருகிறது. அதில் திருச்சி விமானநிலையத்தில் சி.பி.ஐ. ரைடு எதிரொலியாக நேற்று 40 பேர் தங்களுடைய டிக்கெட்டை கேன்சல் பண்ணியதால் - சி.பி.ஐ.க்கு இன்னும் சந்தேகம் வலுவடைந்து விசாரித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த 3 அதிகாரிகளோடு இவர்களோட இன்னும் 6 இன்ஸ்பெக்டர்கள், 6 சிப்பாய்கள் என எல்லோரும் விசாரணையில் இருக்கிறார்கள். இதில் பயணிகள் 5 பேரும் விசாரணை வலையத்தில் இருக்கிறார்கள் என்பது பற்றி இதுவரை எந்த தகவலையும் சி.பி.ஐ. தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி விமானநிலையத்தில் 3 ஆண்டுகள் கழித்து சி.பி.ஐ. சுற்றி வலைத்திருப்பது விமான நிலைய அதிகாரிகள் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்