Published on 25/04/2018 | Edited on 25/04/2018

இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் புதன்கிழமை வள்ளுவர்கோட்டம் முன்பு தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. அ.இ.தலைவர் கே.கங்காதரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சி.செல்லச்சாமி கலந்துகொண்டு உரையாற்றினார். 100 பெண்கள் உட்பட 500 பேர் கலந்து கொண்டனர். உடனடியாக காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வங்கி மோசடிகளை தடுக்க வேண்டும், ஆசிபாவுக்கு நீதி வழங்க வேண்டும், கவர்னரை திரும்பபெற வேண்டும் போன்ற கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.