
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று தென்னை மரத்தில் மோதி நடந்த விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்துள்ள வேலம்மாவலசு பகுதியில் வசித்து வரும் சேகர் என்பவர் தனக்கு சொந்தமான ஆம்னி காரில் சங்ககிரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஆம்னி காரானது சுண்ணாம்புகுட்டை பகுதியை நோக்கி வரும் பொழுது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையில் இருந்து கீழே இறங்கிய கார், சாலை ஓரத்தில் இருந்த தென்னை மரத்தின் மீது பலமாக மோதியது.
இதில் ஆம்னி காரின் முன் பகுதி சேதமடைந்தது. இதில் காரை ஓட்டிய சேகர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். உடனடியாக அங்கு வந்த சங்ககிரி போலீசார் உயிரிழந்த சேகரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.