Skip to main content

"சம்பளம் போடுங்க சார்..." -போராடும் 'BSNL' ஊழியர்கள்!

Published on 15/05/2020 | Edited on 15/05/2020

 

BSNL Contract workers Salary issue

 

ஒரு மாதமா இரண்டு மாதமா..? ஐயா எங்களுக்கு 13 மாதமாக சம்பளமே கொடுக்கவில்லை... என பரிதாபத்துடன் புலம்புகிறார்கள் பொதுத்துறை நிறுவனமான 'பிஎஸ்என்எல்' ஒப்பந்த தொழிலாலர்கள்.


தொலைத்தொடர்பு துறையை தனியார் மயமாக்கி கார்ப்பரேட் கம்பெனிகளிடம் வசதியாக ஒப்படைத்து விட்ட மத்திய பாஜக அரசு, தனது பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் ஊழியர்களை கண்டுகொள்ளாமல் இந்த நிறுவனத்தை விரைவில் மூடுவிழா செய்வதற்கான வேலைகளில் மட்டும்தான் இறங்கியுள்ளது.

 


இந்நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றும் லட்சக்கணக்கானோர் தங்களுக்கு கடந்த 13 மாதங்களாக சம்பளம் வரவில்லை என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று தமிழகம் முழுக்க கண்களில் கருப்பு துணி கட்டி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள். ஈரோடு பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். மத்திய அரசு தனது ஊழியர்களை இப்படி நடுத்தெருவில் இறக்கிவிட்டு உழைப்புக்கான சம்பளம் கொடுக்காமல் அவர்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடுவது  மிகவும் வேதனைக்குரியதாகவுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்