Skip to main content

திண்டுக்கலில் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்... பொதுமக்கள் பீதி...

Published on 12/05/2019 | Edited on 14/05/2019

திண்டுக்கல் மலைக்கோட்டை அருகே உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் குண்டு வெடிக்கும் என மர்ம நபர் ஒருவர் சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு  போன் மூலம் தகவல் தெரிவித்ததின் பேரில் அனைத்து கோவில்களிலும் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர்

 

bomb threat for a temple in dindigul

 

சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலையில் போனில் பேசிய ஒரு மர்ம நபர், திண்டுக்கல் மலையடிவாரத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் வெடிகுண்டு வைத்துள்ளோம் அது  சிறிது நேரத்தில் வெடிக்கப்  போகிறது என்று கூறி போன் லையனை துண்டித்து விட்டான்.

இதனையடுத்து காவல்துறையினர் வெடிகுண்டு தடுப்பு பிரிவுக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் திண்டுக்கல் வெடிகுண்டு தடுப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் ராஜேந்திரன்  தலைமையில் போலீசார் உடனே மோப்ப நாய் உதவியுடன் சீனிவாச பெருமாள் கோவிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறதா?  என அதிரடி சோதனை நடத்தினர். அதன் முடிவில் எங்கும் வெடிகுண்டு இல்லாததால் வெறும் புரளி என தெரிய வந்தது. இருந்தாலும் தாடிக்கொம்பு பெருமாள் கோவில், பழனி சவுமியா நாராயண பெருமாள் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள எட்டு பெருமாள் கோவில்களில் போலீசார் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடிவில் எங்கும் வெடிகுண்டு சிக்காததால் அது வதந்தி என போலீசார் தெரிவித்தனர். எனினும் பெருமாள் கோவிலில் போலீசார் பாதுகாப்பு போடபட்டுள்ளது. அதோடு போனில் பேசிய மர்ம நபர் யார்? எங்கிருந்து பேசினார் என்ற விபரங்களை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். அதன் மூலம் கூடிய விரைவில் அந்த மர்ம நபர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வழிபாட்டு தலங்களில் வெடிகுண்டு வெடிக்க போகிறது என்ற செய்தி கேட்டு மக்கள் பீதியில் இருந்து வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

நூதன முறையில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஐ. பெரியசாமி!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Minister I.Periyasamy who collected votes in the traditional manner

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் ஒன்றியப் பகுதிகளில் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தையொட்டி புறாவை பறக்க விட்டு தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை பெற்று வா என நூதன முறையில் அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில் முருகபவனம் பகுதியில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் துவங்கியது. அப்போது அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரத்தில் பேசும் போது, “மக்கள் பணியே மகேசன் பணி என செயல்படுபவர் தான் சச்சிதானந்தம். நாம் மகத்தான வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைப்போம். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. சச்சிதானந்தம் எம்.பி. ஆகிறார்” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

அதை தொடர்ந்து சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் பேசுகையில், “இது புறாவிடு தூது அல்ல... இந்த புறா டெல்லி வரை பறந்து சென்று வரும். புறாவை டெல்லிக்கு அனுப்பி நமது மாநிலத்திற்கான நிதியை பெற்று வருமா? என்பது சந்தேகமே. இருந்தாலும் இந்த புறாவை பறக்க விட்டு நமது பிரச்சாரத்தை துவக்கி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி” எனக் கூறினார்.