Published on 10/11/2020 | Edited on 10/11/2020

'மத நிகழ்ச்சிகளுக்கு 100 பேர் வரை அனுமதிக்கலாம்' என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரி, பா.ஜ.கவின் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கில் பா.ஜ.கவின் வேல் யாத்திரையில் தலையிடக்கூடாது எனத் தமிழக அரசிற்கும், காவல்துறைக்கும் உத்தரவிட முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வேல் யாத்திரையின் பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் பேசுகையில், கந்தசஷ்டிகவசம், பெண்களை இழிவுபடுத்தியவர்களுக்கு எதிராகத்தான் யாத்திரை நடக்கிறது. எத்தனை தடைகள் வந்தாலும் டிசம்பர் 6-ஆம் தேதி, திருச்செந்தூரில் வேல் யாத்திரை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.