Skip to main content

'பாசமலர் பாத்துட்டு கேவி கேவி அழுதேன்; அதன்பிறகு நான் எடுத்த முடிவு''-பாக்யராஜ் ருசீகரம்

Published on 18/12/2022 | Edited on 18/12/2022

 

Bhagyaraj  delicious speech

 

வளரி ஸ்டூடியோ சார்பில் முனைவர் கா.வே.ச.மருது மோகனின் 'சிவாஜி கணேசன்' நூல் அறிமுக விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டு நடிகர் சிவாஜி கணேசன் உடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

 

நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனரும், நடிகருமான பாக்கியராஜ் பேசுகையில், ''ஒரு நாலு வயசு பையன் சிவாஜி கணேசனின் கட்டபொம்மன் படம் பார்த்துட்டு அந்த செகண்டிலிருந்து அந்த வசனங்களை பேசி பிராக்டிஸ் பண்ணினான். அவர்தான் என்னுடைய உயிர் என்று இருந்தான். அது யாருமல்ல நான்தான் என மருது மோகன் இந்த நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார். அது உண்மைதான் அவர் எப்படி நாலு வயதில் சிவாஜி சார் படத்தை பார்த்துவிட்டு அவர் மாதிரி நடித்து பார்த்துக்கொண்டாரோ அதேபோல் எனக்கு ஏழு எட்டு வயசு இருக்கும்போது 'பாசமலர்' படம் அதுவும் டூரிங் டாக்கீஸ்ல முன்னாள் உட்கார்ந்து பார்த்திருக்கிறேன். படத்தை பார்த்துவிட்டு கேவி கேவி அழுதேன். அதன்பிறகு எப்பொழுது சிவாஜி சார் படம் என்றாலும் அவர் அழுக ஆரம்பிப்பதற்குள் எனக்கு அழுகை வந்துவிடும். இதனாலேயே சில படங்களின் போஸ்டரை பார்த்தாலே பார்க்க வேண்டாம் என்று நினைத்துக் கொள்வேன். குறிப்பாக 'வியட்நாம் வீடு' போஸ்டரை பார்த்த உடனே இதிலேயே அழுக வருது உள்ள போய் உட்கார்ந்தா எவ்வளவு அழுகை வரும் என்று நினைத்துக் கொள்வேன். நான் பெரியவனாக பெரியவனாக தியேட்டர்ல நாம உட்கார்ந்து அழுது கொண்டிருந்தால் பக்கத்தில் இருக்கிறவங்க எல்லாம் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதனால சில படங்கள் போஸ்டரை பார்த்தாலே பயமாக இருக்கும் அந்த அளவிற்கு அவரது படங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

 

எம்ஜிஆர், சிவாஜிய எல்லாம் பார்க்க முடியுமா என்று கோயம்புத்தூரில் சுத்திக்கிட்டு இருந்துட்டு அதன்பிறகு சென்னைக்கு வந்து சினிமாவில் படங்கள் எல்லாம் செய்ய ஆரம்பித்த பிறகு முதன்முதலில் சிவாஜி சார் என் படத்தில் நடிச்சா நல்லா இருக்கும் என 'தாவணிக்கனவுகள்' படத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன். ஆனால் கேட்பதற்கு பயமாக இருந்தது. அவர்கிட்ட போய் எப்படி, ''நான் டைரக்சன் பன்றேன், நீங்க நடிங்க'' என்று எப்படி கேட்கிறது என்று ரொம்ப யோசனையாக இருந்தது. அவர் ஒண்ணும் நினைக்க மாட்டார் நீங்க தைரியமா போய் பேசுங்க என்று சொன்னாங்க. அதன்பிறகு தயங்கி தயங்கி போய் ஒரு பத்து நாள் கால் சீட் வேணும் கதை சொல்றேன் என்று கேட்டேன். போன உடனே அவர் நடிக்க ஒப்புக் கொண்டார். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஏனென்றால் பார்க்க முடியுமா என்று நினைத்தவரை வைத்து நாம் டைரக்ட் பண்ண போகிறோம் என நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது'' என்றார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்