Skip to main content

தாலிக்கு நீதி கேட்டு மனைவியின் தாலியை அணிந்து போராடும் அறிஞர்

Published on 30/12/2018 | Edited on 31/12/2018
t

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள எருக்கலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அறிஞர். அவரது மனைவி பரிமளா.   கடந்த 27 ந் தேதி பரிமளா தவிடு விற்ற பணம் வாங்கச் சென்ற போது அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் பரிமளாவை தாக்கி தாலியை பறித்து கீழே போட்டுள்ளனர். இது குறித்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் தான் இன்று ஞாயிற்றுக் கிழமை எருக்கலக்கோட்டை கடைவீதியில் ஒரு பதாகையை கட்டிவிட்டு தனது மனைவியின் தாலியை தன் கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.


  ஏன் இந்த போராட்டம் என்றால் அருகில் உள்ள பதாகையை காட்டுகிறார். அதில் தாலியை பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.  அதனால் தாலி அணிய மறுக்கிறார் பரிமளா என்று எழுதப்பட்டிருந்தது.


  தாலிக்கு நீதி கேட்டு மனைவியின் தாலியை அணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  

 

சார்ந்த செய்திகள்