Skip to main content

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று அதிமுக ஆலோசனைக் கூட்டம்!

Published on 06/12/2019 | Edited on 06/12/2019

அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவகத்தில் இன்று நடைபெறுகிறது. 

 

admk-party-meeting-chennai

 

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் இறுதியில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்த நிலையில், அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவகத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. 

இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, கட்சியின் நிர்வாகிகளுடன் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் ஆலோசனை செய்கின்றனர். 
 

சார்ந்த செய்திகள்